Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SCSS : ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,050 பெற உதவும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

Senior Citizen Saving Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் தங்களது பணி ஓய்வு காலத்தின் போது மாதம் மாதம் ரூ.20,050 பெறலாம்.

SCSS : ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,050 பெற உதவும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 10 Jun 2025 11:46 AM

பொதுமக்கள் நலனுக்காக அஞ்சலகங்கள் மூலம் அரசு பலவகையான சேமிப்பு திட்டங்களை (Saving Schemes) செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) சிறப்பு சலுகைகள் மற்றும் அதிக வட்டிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் , மூத்த குடிமக்கள் தங்களது பணி ஓய்வு காலத்தில் மாதம் ரூபாய் 20,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். இந்த நிலையில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 20,000 வரை ஓய்வூதியம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலகங்கள் மூலம் மூத்த குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் ஒரு அசத்தலான திட்டம் தன மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்த திட்டம் 5 ஆண்டுகள் கால அளவீட்டை கொண்டுள்ள நிலையில், இதற்கு 8.02 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சிறந்த வட்டி விகிதம், அரசின் நேரடி கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் இது முதலீடு செய்ய சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான திட்டமாக இருப்பது மட்டுமன்றி, அதிக லாபத்தை வழக்க கூடிய திட்டமாகவும் உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – முதலீடு செய்வது எப்படி

8.02 சதவீதம் வட்டி கொண்ட  இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் ரூ.35 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2,40,600 வட்டியாகவும், காலாண்டுக்கு ரூ.60,150 வட்டி வழங்கப்படும். அதாவது மாதத்திற்கு ரூ.20,050 வட்டி வழங்கப்படும். ஆக மொத்தம் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுளாக உள்ள நிலையில், 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே ரூ.12,03,000 கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், மூத்த குடிமக்கள் தங்களது பணி ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,050  பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.