அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைக்கும் அரசு?.. வெளியான முக்கிய தகவல்!
Post Office Saving Schemes | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வரும் நிலையில், தற்போது அரசும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான (FD – Fixed Deposit Scheme) வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. அந்த வகையில், அரசும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான (Post Office Saving Scheme) வட்டியை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அவற்றுக்கான வட்டி குறைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்பட உள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களும் அதன் வட்டி விகிதங்களும்
அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திட்டம் | வட்டி விகிதம் |
அஞ்சலக சேமிப்பு கணக்கு | 4 சதவீதம் |
தேசிய சேமிப்பு சான்றிதழ் | 6.7 சதவீதம் |
மாத வருமான திட்டம் | 7.4 சதவீதம் |
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் | 8.2 சதவீதம் |
பொது வருங்கால வைப்பு நிதி | 7.1 சதவீதம் |
சுகன்யா சம்ரித்தி யோஜனா | 8.2 சதவீதம் |
கிசான் விகாஸ் பத்ரா | 7.5 சதவீதம் |
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் | 7.5 சதவீதம் |
மேற்குறிப்பிட்டுள்ள தகவலின் படி, இவை அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதமாக உள்ளன. இந்த நிலையில், இவற்றில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதா?
அரசு அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Interest Rate) குறைத்து தான். ரெப்போ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே அளவில் நீடித்து வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தொடங்கி வெறும் 6 மாதங்களில் மட்டும் மூன்று முறை குறைந்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி மாதத்தில் 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.50 சதவீதமாக உள்ளது. அதாவது வெறும் 6 மாதத்தில் 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது.
இது அஞ்சலக சேமிப்பு திட்ட வட்டி விகிதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அரசு தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.