FD Scheme : ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்தாலும் மூத்த குடிமக்கள் FD-க்கு 8.8% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
Best Fixed Deposit for Senior Citizens | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக பல வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியை குறைத்தன. இருப்பினும் மூத்த குடிமக்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.75 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கி கடன்கள் (Bank Loans) மட்டுமன்றி, நிலையான வைப்பு நிதி திட்டங்களும் (FD – Fixed Deposit Schemes) ரெப்போ வட்டி விதிகத்தை (Repo Interest Rate) மையமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருவதால் சில வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியை குறைத்துள்ளன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைத்தாலும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.75 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
6 மாதங்களில் மூன்று முறை குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம்
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6 மாதங்களாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் வைத்திருந்த நிலையில், 2025 ஜனவரி மாதம் முதல் மூன்று முறை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து தற்போது வெறும் 5.50 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக பல வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ள நிலையில், சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகள் திட்டத்திற்கு 8.8 சதவீதம் வட்டி வழங்குகிறது.




ரெப்போ வட்டியை 5.50 சதவீதம் வரை குறைத்த ஆர்பிஐ
#WATCH | RBI Governor Sanjay Malhotra says, “… The MPC decided to reduce the policy Repo Rate under the liquidity adjustment facility by 50 basis points to 5.5%. This will be with immediate effect. Consequently, the Standing Deposit Facility (STF) Rate shall stand adjusted to… pic.twitter.com/siUUlBmcrG
— ANI (@ANI) June 6, 2025
மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டம் – 8.75% வட்டி வழங்கும் வங்கிகள்
- சூர்யோதாய் சிறு சேமிப்பு வங்கி (Suryoday Small Finance Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- உத்கர்ஷ் சிறு சேமிப்பு வங்கி (Utkarsh Small Finance Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- யூனிட்டி சிறு சேமிப்பு வங்கி (Unity Small Finance Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- ஸ்லைஸ் சிறு சேமிப்பு வங்கி (Slice Small Finance Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
- ஜனா சிறு சேமிப்பு வங்கி (Jana Small Finance Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
மேற்குறிப்பிட்ட வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.