AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Repo Rate : ரெப்போ வட்டி விகித குறைப்பு FD முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும்?

RBI Reduced Repo Rate | இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாகவே ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 06, 2025) மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Repo Rate : ரெப்போ வட்டி விகித குறைப்பு FD முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Jun 2025 16:09 PM IST

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்து வருகிறது. அந்த வகையில் இன்றும் (ஜூன் 06, 2025) ரெப்பொ வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என்று ஒரு தரப்பினர் மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களில் (FD – Fixed Deposit Scheme) முதலீடு செய்தவர்களுக்கு ரெப்போ வட்டி விகித குறைப்பு பெரும் கவலையாக மாறியுள்ளது. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகித குறைப்பு நிலையான வைப்பு நிதி திட்ட முதலீடுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம்

பொதுமக்கள் சேமிப்பதற்காக பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி. இந்த திட்டம் வங்கிகளில் மட்டுமின்றி, அரசு சார்பில் தபால் நிலையங்கள் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலையான வைப்பு நிதி திட்டம் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில் திட்டத்தின் முடிவில் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து நல்ல தொகையை பெற முடியும். இதன் காரணமாகவே ஏராளமான பொதுமக்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ரெப்போ வட்டி விகித குறைப்பு நிலையான வைப்பு நிதி திட்டத்தை எவ்வாறு பாதிக்கும்

நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் பல்வேறு காரணிகளை வைத்து தீர்மானம் செய்யப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகையின் வட்டி விகிதமாக ரெப்போ உள்ள நிலையில், அது குறைக்கப்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்கும். ஆனால், நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அது முற்றிலும் வேறுபடும். அதாவது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் போது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியும் குறைக்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த பலன்களை வழங்கும் நிலையை உருவாக்கிவிடும்.

ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த இந்திய ரிசர்வ் வங்கி

முன்னதாக ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 bps (அடிப்படை புள்ளிகள்) குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக்க உள்ளது. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போது பல வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைத்தன. தற்போது மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் மேலும் சில வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us