Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RBI : 500 ரூபாய் நோட்டு கைவிடப்படுவதாக உலா வரும் தகவல் பொய்யானது.. மத்திய அரசு விளக்கம்!

Central Government Denied Discontinue of 500 Rupees | இந்திய ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுக்களை கைவிடப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

RBI : 500 ரூபாய் நோட்டு கைவிடப்படுவதாக உலா வரும் தகவல் பொய்யானது.. மத்திய அரசு விளக்கம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 08 Jun 2025 22:16 PM

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) 2026-க்குள் 500 ரூபாய் நோட்டுக்களை கைவிடப்போவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 500 ரூபாய் நோட்டுக்களை கைவிடப்போவதாக பரவி வரும் தகவல் பொய்யானது என்றும், அத்தகைய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுக்களை கைவிடப்போவதாக வெளியான தகவல் குறித்து ஆர்பிஐ என்ன விளக்கம் அளித்துள்ளது என விரிவாக பார்க்கலாம்.

ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் வைக்க கோரிய ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் வைக்குமாறு சமீபத்தில் வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதாவது செப்டம்பர் 30, 2025-க்குள் ஏடிஎம் மையங்களில் 75 சதவீதம் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை வைக்க வேண்டும் என்றும், 2026 மார்ச் மாதத்திற்குள் 90 சதவீத 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதன் காரணமாக ஆர்பிஐ 500 ரூபாய் நோட்டுக்களை கைவிடப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த பிஐபி உண்மை சரிபார்ப்பு அமைப்பு, ஆர்பிஐ 500 ரூபாய் நோட்டுக்களை கைவிடப்போவதாக வெளியாகும் தகவல் பொய்யானது என கூறியது.

பிஐபி உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கம்

500 ரூபாய் நோட்டுக்கள் கைவிடப்படுவதாக உலாக வரும் தகவலுக்கு ஆர்பிஐ மறுப்பு

இந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறப்படுவதாக உலா வரும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 500 ரூபாய் நோட்டுக்களை கைவிடப்போவதாக பரவி வரும் தகவல் பொய்யானது என்றும், அத்தகைய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.