UPI : பேலன்ஸ் செக் முதல் ஆட்டோ டெபிட் வரை.. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
UPI Changes From August 1, 2025 | இந்தியாவில் ஏராளமான மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஆக்ஸ்ட் 1, 2025 முதல் யுபிஐ-ல் சில முக்கிய மாற்றங்கள் வர உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், யுபிஐ-ல் ஆகஸ்ட் 1, 2025 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இந்த விதிகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, ஆட்டோபே (Autopay) அம்சங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த நிலையில், யுபிஐ-ல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். யுபிஐ மூலம் மிக விரைவாக பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால், பொதுமக்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தியாவை பொருத்தவரை சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரையும், சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என அனைத்து இடங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ள யுபிஐ-ல் சில முக்கிய மாற்றங்கள் வர உள்ளது.
இதையும் படிங்க : UPI : யுபிஐ பண பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா.. சர்வதேச நிதியம் அறிக்கை!




யுபிஐ-ல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் – என்ன என்ன?
ஆகஸ்ட் 1, 2025 முதல் யுபிஐ-ல் சில முக்கிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. இந்த விதிகள் யுபிஐ செயலிகளான போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay) மற்றும் பேடிஎம் (Paytm) உள்ளிட்ட அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும்.
ஒரு நாளில் 50 முறை மட்டுமே அனுமதி
கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் ஆகஸ்ட் 1, 2025 முதல் ஒரு நாளுக்கு 50 முறை மட்டுமே இருப்பு பரிசோதனை செய்ய முடியும். பெரும்பாலான பயனர்கள் அதிக முறை இருப்பு சரிபார்ப்பதால் யுபிஐ சேவை பாதிக்கிறது. அதனை சரிசெய்யும் விதமாக இந்த புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது.
மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குகள்
ஆகஸ்ட் 1, 2025 முதல் ஒரு நாளுக்கு 25 முறை மட்டுமே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை சரிப்பார்க்க யுபிஐ செயலிகள் அனுமதிக்கும். அடிக்கடி மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐகளை சோதனை செய்யும் பட்சத்தில் அது சேவையில் பாதிப்பை ஏற்படுத்து. எனவே தான் இந்த மாற்றமும் கொண்டுவரப்பட உள்ளது.
ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு புதிய நேர வரம்புகள்
பல்வேறு பயனர்கள் செயலிகளை பயன்படுத்துவதற்காக மாத சந்தா செலுத்துகின்றனர். குறிப்பாக நெட்பிளிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட இணையதளங்களை பயன்படுத்த கட்டணம் செலுத்துகின்றனர். இவற்றை பயன்படுத்த தாகாவே கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நிலையில், இந்த கட்டணம் எடுத்துக்கொள்ளப்படுவதற்கான கால நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியுமா? எப்படி செய்வது?
அதாவது ஆக்ஸ்ட் 1, 2025 முதல் காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் 5 மணி வரை மற்றும் இரவு 9.30-க்கு பிறகு ஆகிய நேரங்களில் மட்டுமே இனி பிடித்தம் செய்யப்படும். இந்த மாற்றமும் ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது.