PayPal World : இனி உலகின் எந்த மூலையில் இருந்தும் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்!
UPI Goes Global : பேபால் வேர்ல்டு என்ற தளத்தில் உலகின் அனைத்து டிஜிட்டல் வாலெட்டுகளையும் ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ (UPI) என்பது இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. பெரிய ஷாப்பிங் மால்கள் தொடங்கி, சிறிய பெட்டி கடைகள் வரை பணப்பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) என்ற அமைப்பால் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், இந்தியர்களின் பணபரிமாற்ற முறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய கடைகள் துவங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் வரைக்கும் இன்று கியூஆர்கோட் (QR Code) வழியே கட்டணங்களை ஏற்கும் நிலைக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பும் வசதியைக் கொண்டுள்ள யுபிஐ, தற்போது இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் புதிய டிஜிட்டல் பரிமாற்ற உலகத்தை உருவாக்கும் பேபால், அதன் புதிய தளமான பேபால் வேர்டு (PayPal World) என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளம், உலகளவில் பயன்படுத்தப்படும் முக்கியமான பணப் பரிமாற்ற முறைகள் மற்றும் டிஜிட்டல் வாலெட்டுகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இந்த ஒரே ஒரு செயலி போதும்.. காணாமல் போன ஸ்மார்ட்போன் உங்கள் வசம் வந்துவிடும்!
வெளிநாடுகளில் கூட UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்!
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சம் என்னவெனில், இந்தியாவின் UPI (Unified Payments Interface) சேவையை இப்போது பேபால் வேர்ல்ட் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியர்கள் தற்போது வெளிநாட்டு இணையதளங்களில், கடைகளில் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் சந்தைகளில், UPI வழியாகவே வெளிநாட்டு வணிக நிறுவனங்களில் பணம் செலுத்த முடியும்.
உதாரணமாக, ஒரு இந்திய பயனர் அமெரிக்காவிலுள்ள ஷூ கடையில் சாப் செய்வதற்காக சென்று, ஒரு ஜோடி ஷூ வாங்க விரும்பினால், அவர் செக் அவுட் பக்கத்தில் பைபால் தேர்வு செய்தபின், UPI என்ற ஒரு பட்டனும் காட்சியளிக்கும். இதனை கிளிக் செய்வதன் மூலம், அவர் UPI ID / QR Code மூலமாகவே, பணம் அனுப்பலாம். இந்தியாவில் உள்ளதுபோலவே, வெளிநாட்டில் இருந்தும் கவலையில்லாமல் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பது இதன் சிறப்பு.
இதையும் படிக்க : UPI : தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம்.. யுபிஐ-ல் வரும் Charge Back அம்சம்!
உலகளாவிய பயனாளர்களுக்கான நன்மைகள்
PayPal World தளம், இந்திய பயனாளர்களுக்கு மட்டுமல்லாது, பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு பேபால் பயணர், சீனாவுக்கு பயணம் செய்தால், அங்குள்ள Weixin Pay ஏற்கும் கடைகளில் நாம் யுபிஐ ஐடி அல்லது கியூர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஜெர்மனியில் உள்ள நண்பருக்குப் பணம் அனுப்ப விரும்பினால், அவரது மொபைல் எண்ணைத் தேர்வு செய்து, PayPal வாலெட்டின் வாயிலாக அனுப்பலாம்.