Instagram : இன்ஸ்டாவில் லைவ் ஸ்டிரீமிங் செய்யும் நபரா நீங்கள்.. இந்த புதிய விதியை தெரிந்துக்கொள்ளுங்கள்!
Instagram Live Stream New Update | உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்டிரீம் அம்சத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், லைவ் ஸ்டிரீம் அம்சத்தை பயன்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில் அதன் பாதுகாப்பை பலப்படுத்தவும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் மெட்டா (Meta) பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் செயலியில் லைவ் ஸ்டிரீமிங் (Live Streaming) அம்சத்தில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றம் பெரும்பாலான பயனர்களை பாதிக்கும் விதமாக உள்ளது. ஆனால் இது குறித்து கூறியுள்ள மேட்டா, பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சி என கூறியுள்ளது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்டிரீமிங் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்டிரீமிங் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றம்
இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு அம்சங்கள் உள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் லைவ் ஸ்டிரீமிங் அம்சத்தை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எந்த ஒரு நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடியும். பெரும்பாலான மக்கள் விழாக்களின் போது, பயணங்களின் போது இவ்வாறு லைப் ஸ்டிரீமிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் தங்களது நண்பர்களுடன் உரையாடுவதற்கு கூட லைவ் ஸ்டிரீமிங் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அனைவரும் பயன்படுத்தும் ஒரு அம்சமாக இந்த லைவ் ஸ்டிரீமிங் உள்ள நிலையில், இனி அனைவரும் பயன்படுத்தும் அம்சமாக அது இருக்காது.
இதையும் படிங்க : உங்கள் பெயரில் போலி Instagram கணக்கு தொடங்கப்படுகிறதா?.. அப்போ இத பண்ணுங்க!




1,000 ஃபாலோவர்ஸ் இருந்தால் மட்டுமே லைவ் ஸ்டிரீமிங் செய்ய முடியும்
முன்னதாக 100 ஃபாலோவர்ஸ்களை கொண்டவர்கள் கூட இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்டிரீமிங் செய்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது இனி ஒருவர் இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்டிரீமிங் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 1,000 ஃபாலோவர்ஸ்களை கொண்டிருக்க வேண்டும். 1,000-க்கும் குறைவாக ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள நபர்கள் வீடியோ கால் மூலம் தொடர்புக்கொண்டு உரையாடலாம். லைவ் ஸ்டிரீமிங் செய்வதற்கு அதிக பணம் தேவைப்படும் பட்சத்தில் அதனை Cost Effective ஆக செய்ய முடியாது என கருதும் இன்ஸ்டாகிராம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க : இளைஞர்களை ஈர்க்கும் மெட்டாவின் புதிய Imagine Me அம்சம்.. அப்படி என்ன சிறப்பு அதில்?
அதுமட்டுமன்றி, முறையற்ற மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது. தவறான தகவல்களை பதிவு செய்து தடை செய்யப்படும் இன்ஸ்டாகிராம கணக்குள மீண்டும் 1,000 ஃபாலோவர்ஸ்களை பெற்றால் மட்டுமே அவர்களால் மீண்டும் லைவ் ஸ்டிரீமிங் செய்ய முடியும் என இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.