AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்ஸ்டாகிராமில் புதிய ‘டிரையல் ரீல்ஸ்’ அம்சம் – இனி உங்கள் ரீல்ஸ் அதிகம் ரீச் ஆக வாய்ப்பு!

Instagram’s Trial Reels : இன்ஸ்டாகிராம் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களின் ரீல்ஸ் அதிகம் ரீச்சாகும் வகையில் டிரையல் ரீல்ஸ் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் புதிய ‘டிரையல் ரீல்ஸ்’ அம்சம் – இனி உங்கள் ரீல்ஸ் அதிகம் ரீச் ஆக வாய்ப்பு!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Jun 2025 19:39 PM IST

இன்ஸ்டாகிராம் (Instagram) இன்று அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளமாக (Social Media) மாறியுள்ளது. எளிய மக்கள் பலரையும் பிரபலங்களாக மாற்றிய பெருமை இன்ஸ்டாகிராமையே சேரும். இன்ஸ்டாகிராமில் கல்வி, தொழில் போன்றவற்றை மேம்படுத்த இன்ஸ்டாகிராம் ஒரு கருவியாக பயன்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் அதன் யூசர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது இன்ஸ்டாகிராம் தனது 15ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக, பயனாளர்களை அதிக சுதந்திரத்துடன் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஊக்குவிக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ஹெடான ஆடம் மொசெரி, நிறுவனத்தின் முன்னேற்றப் பாதையை விளக்கும் வகையில் ஒரு பிளாக் பதிவில் இதை அறிவித்துள்ளார்.

அந்த வகையில் யூசர்களின் புரொஃபைலில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை விருப்பத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்திக்கொள்ளலாம்.  இதன் புதிய ஃபாலோயர்கள் எந்த வீடியோவை முதன் முதலில் பார்க்க வேண்டும்  என்பதை நீங்களே முடிவு செய்யலாம். முன்பு புதிதாக அப்லோட் செய்யப்படும் வீடியோக்களும் புகைப்படங்களும் முன்னணியில் இருக்கும். இதனை மாற்றும் விதமாக புதிய அப்டேட்டில் உங்களுக்கு பிடித்த அல்லது அதிகம் விரும்பப்பட்ட ரீல்ஸ்களை முன்னணியில் வைக்கலாம்.

டிரையல் ரீல்ஸ் (Trial Reels)

இதன் மூலம் நீங்கள் ரீல்ஸ் போடும்போது, அந்த வீடியோ உங்கள்  ஃபாலோயர்ஸ்க்கு மட்டும் காட்டப்படாமல், பின்தொடராத சிலருக்கும் மட்டும் முதலில் காட்டப்படும். இதனால் உங்களுக்கு ரீச் ஆகுமா என்ற அழுத்தம் குறைவாக இருக்கும். அவர்கள் ரியாக்சனை வைத்து உங்கள் ரீல்ஸின் ரிசல்ட்டை தெரிந்துகொள்ளலாம். இதைச் செய்த கிரியேட்டர்களில் 40 சதவிகிதம் பேர் அதிகம் ரீல்ஸ் போட அதிகமாகியிருக்கிறது. மேலும் 80 சதவிகிதம் பேருக்கும் அவர்கள் ரீல்ஸ்களின் பார்வையாளர்கள் அதிகமாகியிருக்கிறார்கள் என இன்ஸ்டாகிராம் தெரிவித்திருக்கிறது.

குயட் போஸ்டிங் (Quiet Posting)

நீங்கள் ஒரு போஸ்ட் போடும்போது, அது உங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலில் மட்டும் வெளியாகும். அதாவது அந்த போஸ்டை ஒருவர் உங்கள் புரொஃபைலில் வந்து மட்டுமே பார்க்க முடியும்.  அந்த போஸ்ட் உடனே யாருடைய ஃபீடில் தோன்றாது. போஸ்ட் எல்லோருக்கும் உடனே தெரிய வேண்டாம்னு நினைக்கிறவர்களுக்கு இந்த புதிய அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அப்டேட் தொடர்பாக இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி ஒரு வலைப்பதிவில், இன்ஸ்டாகிராம் இப்போது யூசர்களுக்கு ஆதரவாக புதிய வசதிகள் மற்றும் திட்டங்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். பலர் தங்கள் படைப்பாற்றலைக் காட்ட விரும்புகிறார்கள், ஆனால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள், இந்தத் தயக்கத்தைப் போக்க, இந்தப் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் எனவும் மக்கள் இன்னும் தைரியமாக ரீல்ஸ் போடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us