AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போன் பேட்டரியை காலி செய்யும் இன்ஸ்டாகிராம் – தவறை ஒப்புக்கொண்ட கூகுள்

Instagram Battery Drain Issue : கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தாவிட்டாலும் அது பின்னணியில் செயல்பட்டு போன் பேட்டரியை காலி செய்வதாக யூசர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவறை ஒப்புக்கொண்ட கூகுள் பயனர்களை புதிய அப்டேட்டை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

போன் பேட்டரியை காலி செய்யும் இன்ஸ்டாகிராம் – தவறை ஒப்புக்கொண்ட கூகுள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Jun 2025 19:05 PM IST

புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதற்கான பிரபல செயலியான இன்ஸ்டாகிராம் (Instagram), தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஒரு பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வருவதாக கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, பல ஆண்ட்ராய்டு (Android) யூசர்கள் குறிப்பாக பிக்சல் (Pixel) பயனர்கள், தாங்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாமலேயே பேட்டரி பவர் வேகமாக குறைந்து வருவதாக புகார் தெரிவித்தனர். இதற்கு காரணம், இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாவிட்டாலும் அது பின்னணியில் தொடர்ந்து இயங்கி, அதிகமாக பேட்டரி பவரை தீர்ப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து மெட்டா (Meta) எந்த விளக்கமும் தரவில்லை என்றாலும், கூகுள் நேரடியாக தலையிட்டு இது பற்றி தனது சப்போர்ட் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

பயன்படுத்தாமலேயே பேட்டரி பவரை காலி செய்யும் இன்ஸ்டாகிராம்

பயனர்களின் புகாரின் படி, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படாத நிலையிலும் பின்னணி செயல்பாட்டில் பேட்டரியை அதிகமாக உபயோகித்து வந்தது. இதனால் சிலரது மொபைல்கள் அதிகமாக வெப்பமடைவதாகவும், தினமும் பேட்டரி பவரை இரண்டு மடங்கு வேகத்தில் காலியாக்கியதாகவும் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் செயல்பாடுகள் குறித்து சந்தேகங்களை எழுப்பினர். இருப்பினும் இந்த பிரச்சனை குறித்து மெட்டா (Meta) எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், சில பயனர்கள் பழைய அப்டேட்டுக்கு மாறியபோதும் போன் வெப்பமடைவது குறையவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.  சிலர் Instagram Lite தற்காலிகமாக பயன்படுத்தியதின் மூலம் பிரச்னை இன்ஸ்டாகிராமில்தான் இருக்கிறது என உறுதி செய்துள்ளனர்.

பிரச்னைக்கு தீர்வாக புதிய அப்டேட்

இந்நிலையில் மே 28,  2025  அன்று வெளியான அப்டேட்டில், கூகுள் இன்ஸ்டாகிராமில் பேட்டரி பவரை காலி செய்யும் பிரச்சனை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான தீர்வாக, இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்டான Build 382.0.0.49.84 தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக்கூடிய நிலையில் உள்ளது. இந்த புதிய அப்டேட் பேட்டரி பவரை உறிஞ்சும் பிரச்சனையை சரிசெய்யும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த பிரச்சனை எந்த ஆண்ட்ராய்டு மாடல்களில் ஏற்பட்டது என்பது குறித்து கூகுள் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், மே, 2025ன் போது அப்டேட் செய்யப்பட்ட அனைத்து பிக்சல் போன்களில்  இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளது. பிற நிறுவனங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது இன்னும் தெரியவில்லை.

பாதிக்கப்பட்டோர் செய்ய வேண்டியது?

இன்ஸ்டாகிராம் பயன்பாட்டால் பேட்டரி வேகமாக காலியாகிறது என்றால், உடனடியாக பிளே ஸ்டோருக்கு சென்று இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்டுக்கு மாற்ற வேண்டும். இது உங்கள் ஸ்மார்ட்போன் சீராக இயங்க உதவும். இது போன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, எந்தவொரு செயலியையும் அதன் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான அப்டேட்டை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை கூகுள் சொன்னது படி பிளே ஸ்டோரில் Build 382.0.0.49.84 அப்டேட்டை புதுப்பிக்கவும். இந்த பிரச்னை தொடர்ந்தால் இன்ஸ்டாகிராம் லைட் அல்லது புரௌசர் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவும்.

Follow Us