AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்! இனி போட்டோக்கள் நேரடியாக அப்லோட் செய்யலாம்

Instagram Update : இன்ஸ்டாகிராம் செயலி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் நமது ஸ்மார்ட்போன்களில் எடுக்கப்படும் போட்டோக்களை நேரடியாக இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக போட்டோக்களை கிராப் செய்யவோ, எடிட் செய்யவோ தேவையில்லை.

இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்!  இனி போட்டோக்கள் நேரடியாக அப்லோட் செய்யலாம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Jun 2025 18:27 PM IST

இன்ஸ்டாகிராம் (Instagram) நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. துவக்கத்தில் போட்டோ அப்லோட் செய்யும் ஒரு செயலியாக இருந்த இன்ஸ்டாகிராம் தற்போது, ரீல்ஸ் (Reels), ஸ்டோரி, லைவ் என யூசர்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் தனது சமீபத்திய அப்டேட்டில், பயனர்களுக்கு 3:4 ஆஸ்பெக்ட் ரேசியோவில் நேரடியாக புகைப்படங்களை பதிவேற்ற அனுமதிக்கிறது. இனி இன்ஸ்டாகிராமில் போட்டோவை அப்லோட் செய்ய கிராப் செய்ய வேண்டியது இல்லை. இதுவரை 1:1 ஸ்கொயர் அல்லது 4:5 வெர்டிகல் கோணத்தில்தான் படங்களை அப்லோடு செய்ய முடிந்தது. இப்போது 3:4 ஆஸ்பெக்ட் ரேசியோவில் முழுமையாக போட்டோக்களை அப்லோட் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராமின் நிர்வாக இயக்குநர் அடம் மொசெரி திரெட்ஸ் (Threads) பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் இதனை உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது பதிவில்,  ‘இன்ஸ்டாகிராம் இப்போது 3:4 ஆஸ்பெக்ட் ரேசியோ கொண்ட போட்டோக்களை சப்போர்ட் செய்கிறது.  இது இன்று பெரும்பாலான ஸ்மார்ட்போன் கேமராக்களின் இருக்கும் ஆஸ்பெக்ட் ரேசியோ எனப்தால்,  நீங்கள் எவ்வாறு படம் எடுத்தீர்களோ, அது அப்படியே இன்ஸ்டாவில் காட்டப்படும். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி கிராப் செய்ய வேண்டியதில்லை

இன்ஸ்டாவில் புகைப்படங்களை அப்லோடு செய்யும்போது, பழையதாக 1:1 அல்லது 4:5 கோணத்தில் மாற்ற வேண்டியது வாடிக்கையாக இருந்தது. இதில் நாம் செட் செய்திருந்த ஃபிரேம் பாதிக்கப்படும். அல்லது முக்கியமான பகுதி கிராப் ஆகும் என்பதே அதில் உள்ள பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது 3:4 ஆஸ்பெக்ட் ரேசியோவில் தானாகவே சப்போர்ட் செய்யப்படுவதால், உங்கள் புகைப்படங்கள் எந்த வகையில் எடுத்தீர்களோ அதேபடி உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்பிக்கப்படும்.

இன்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வெர்டிக்கல் வடிவில் புகைப்படங்களை எடுத்து, அதை அப்படியே இன்ஸ்டாகிராமில் பகிர விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் போட்டோ எடுத்தபடியே நேரடியாக இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்யும் வகையில் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தற்போது பிரொஃபைல் கிரிட்டில் கூட செங்குத்தான வடிவில் புகைப்படங்கள் காட்டப்படுகிறது. மேலும் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏற்கனவே வெர்டிகல் கண்டென்ட்டுக்கு ஆதரவளிப்பது போல தற்போது 3:4 ஆஸ்பெக்ட் ரேசியோவில் போட்டோக்களை அப்லோட் செய்யும் வகையில் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போட்டோகிராபர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

 எப்படி பயன்படுத்துவது?

இந்த புதிய வசதியை பயன்படுத்துவது மிகவும் எளிது

  • உங்கள் ஐபோன் அல்லது ஆண்டிராய்டில் இன்ஸ்டாகிராமை திறக்கவும்

  • உங்கள் கேமராவில் எடுத்த 3:4 புகைப்படத்தை தேர்வு செய்யவும்

  • நாம் அப்லோட் செய்யும் போட்டோவுக்கு ஏற்றபடி தானாகவே அதன் ஒரிஜினல் ஆஸ்பெக்ட் ரேசியோவில் மாற்றும்.

  • கிராப் செய்யவோ, எடிட் செய்யவோ தேவையில்லை.

Follow Us