Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Insta Update! இன்ஸ்டாகிராமில் ஏஐ வந்தாச்சு – போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!

Instagram AI Feature : இன்ஸ்டாகிராமின் புதிய அம்சமான Backdrop மூலம், நீங்கள் எளிதில் உங்கள் ஸ்டோரி புகைப்படத்தின் பின்புலத்தை மாற்றலாம். இந்த வசதி, ஏஐ-ன் உதவியுடன், பயனர்களுக்கு விருப்பமான பின்புலங்களை உருவாக்க உதவுகிறது. இதனை எப்படி மாற்றுவது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Insta Update! இன்ஸ்டாகிராமில் ஏஐ வந்தாச்சு – போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 30 Apr 2025 20:17 PM

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வணிகம், மருத்துவம், கல்வி மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் இது புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சமூக வலைதள நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயனர்களுக்கு சிறந்த அனுவபத்தை வழங்க முயற்சித்து வருகின்றன. கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், மெட்டா உள்ளிட்ட அனைத்து பெரிய நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தங்கள் சேவைகளை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அதன் ஒரு பகுதியாக மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப்பில் ஏ.ஐ. அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

AI Backdrop என்பது என்ன?

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய AI Backdrop அம்சத்தின் மூலம், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பதிவேற்றப்படும் புகைப்படங்களின் பின்புலத்தை பயனர்கள் தங்களுக்கு விருப்பப்படி மாற்றிக் கொள்ள முடியும். இது DALL-E, Midjourney போன்ற AI image generator-களை போல் இயங்கும். இந்த வசதி தற்போது சில நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் விரிவுபடுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

இந்த அம்சத்தை பயன்படுத்த, உங்கள் ஸ்டோரி புகைப்படத்துடன் கீழ்கண்ட முறையில் மாற்றிக்கொள்ளலாம்.

  • இன்ஸ்டாகிராம் மூலம் புகைப்படம் எடுக்கவும் அல்லது கேலரியில் இருந்து புகைப்படத்தை தேர்வு செய்யவும்.
  • ஸ்டோரி பக்கத்திற்கு சென்று அதன் மேல் பகுதியில் உள்ள Backdrop என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
  • Backdrop என்பதை கிளிக் செய்த பின், புகைப்படத்தில் உள்ள நபர்கள், விலங்குகள், மற்றும் பின்புலத்தை ஏஐ கணக்கிடும்.
  • நீங்கள் விரும்பாத பகுதிகளை deselect செய்யலாம். அந்த பகுதிகள் புதிய பின்புலத்தால் மாற்றப்படும்.
  • பிறகு Next ஐ கிளிக் செய்யவும்.
  • அப்போது ஒரு Text Prompt Box தோன்றும் – இதில் உங்கள் விருப்பமான பேக்டிராப்பை ஆங்கிலத்தில் பதிவிடவும்.  உதாரணமாக  Beach sunset, Underwater with fishes என உங்களுக்கு விருப்பமான பின்புலத்தை பதிவிடவும்.
  • உங்களுடைய prompt அடிப்படையில் இரண்டு புதிய பின்புலங்கள் உருவாகும்.
  • விருப்பமானதைத் தேர்வு செய்து Next-ஐ கிளிக் செய்து, “Your Story”-யில் பகிரலாம்.

தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

  • நாம் மாற்றும் புகைப்படங்களில் AI Generated Image  என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் தவறான பயன்பாடுகளைத் தவிர்க்கும்.

  • உங்கள் prompt-ல் தனிப்பட்ட தகவல்களை (phone number, location) குறிப்பிட வேண்டாம்.

  • ஏஐ உருவாக்கும் படம் 100% சரியாக இருக்குமென்று உறுதி இல்லை.

  • மெட்டா, உங்கள் prompt மற்றும் உருவாக்கப்பட்ட படங்களை AI மேம்பாட்டுக்காக சேமிக்கலாம் இது பிரைவசி பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...