Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Instagram : இன்ஸ்டாகிராமில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

Instagram introduces message scheduling : இன்ஸ்டாகிராம் டெக்ஸ்ட் மெசேஜ்களை 29 நாட்கள் வரை முன்பே திட்டமிட்டு அனுப்ப முடியும் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிறந்த நாள் வாழ்த்து போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மறக்காமல் இருக்க முன் கூட்டியே வாழ்த்து செல்ல முடியும். இந்த வசதி குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Instagram : இன்ஸ்டாகிராமில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 15 May 2025 19:59 PM

இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கையில் இன்ஸ்டாகிராம் (Instagram) பெரும் பங்கு வகிக்கிறது. துவக்கத்தில் போட்டோ பதிவிடும் ஆப்பாக இருந்த இன்ஸ்டாகிராம் இன்று தனது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் பயனர்களுக்கான மெசேஜிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய வசதியை  கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலம் டெக்ஸ்ட் அடிப்படையிலான டைரக்ட் மெசேஜ்களை (DM) 29 நாட்கள் வரை முன்பே திட்டமிட்டு அனுப்ப முடியும். குறிப்பாக பிறந்த நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு முன் கூட்டியே மெசேஜ் அனுப்ப முடியும். இதனால் கடைசி நேரத்தில் நாம் மறந்துவிட்டால் கூட நமக்கு விருப்பமானவர்களுக்கு இன்ஸ்டாகிராம் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்.

இந்த வசதி எப்படி வேலை செய்கிறது?

பயனர் ஒருவர் தனிப்பட்ட உரையாடலில் ‘send’ பட்டனை நீண்ட நேரம் அழுத்திய படி இருந்தால், ஒரு புதிய விருப்பம் தோன்றும். அதில், விரும்பிய தேதியும் நேரமும் தேர்ந்தெடுத்து மெசேஜ் அனுப்பும்படி திட்டமிடலாம். இதனால் மக்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து போன்ற மெசேஜ்களை முன் கூட்டியே அனுப்ப முடியும். மேலும் குறிப்பிட்ட தினத்தில் நண்பர்கள் செய்ய வேண்டிய வேலைகளை நாம் இந்த வசதியின் மூலம் நியாபகப்படுத்த முடியும். கிரியேட்டர்களாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினம் அப்லோட் செய்ய வேண்டிய வீடியோக்கள் குறித்து அவர்களுக்கு நினைவுபடுத்த முடியும்.

என்னென்ன அனுப்ப முடியாது?

தற்போதைக்கு, இந்த வசதி டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFக்கள் போன்றவற்றை திட்டமிட்டு அனுப்ப முடியாது. அவற்றை பழையபடி நேரடியாகவே அனுப்ப வேண்டியதுதான். இது ஒரு குறையாக இருந்தாலும் விரைவில் இதுவும் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் மெசேஜ் அனுப்பியதை எப்படி உறுதி செய்ய முடியும்?

நீங்கள் ஒரு மெசேஜை ஷெட்யூல் செய்த பின் அந்த உரையாடலில் ஒரு நோட்டிஃபிகேஷன் காட்டப்படும். அதன் மூலம் எத்தனை மெசேஜ்கள் ஷெட்யூல் செய்யப்பட்டருக்கின்றன என்பதை அறிய முடியும்.  இதனால் நாம் குறிப்பிட்ட நாளில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருப்பதை உறுதி செய்ய முடியும்.

மாற்றங்கள் செய்ய முடியுமா?

டிஎம்-ல் அனுப்பிய மெசேஜ்கள் இருக்கும். அந்த நோட்டிஃபிகேசனை கிளிக் செய்தால் நாம் ஷெட்யூல் செய்த மெசேஜ்களை பார்க்கலாம்.  அதனை நீக்கவோ, உடனடியாக அனுப்பவோ முடியும். நீண்ட நேரம் மெசேஜை கிளிக் செய்து இந்த விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.

மெசேஜ்களை எவ்வளவு நாள் முன்பே திட்டமிடலாம்?

பயனர்கள் தங்களது மெசேஜ்களை அதிகபட்சமாக 29 நாட்கள் வரை முன்பே திட்டமிட்டு அனுப்பலாம்.  இந்த வசதி சமூக ஊடகங்களில் தொடர்புகளை திட்டமிட்டு பராமரிக்க விரும்புவோருக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?
எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?...
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாது தவறுகள் - முழு விவரம் இதோ!...
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!
சம்மரில் ஈஸியா எடையைக் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!...
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி
இதுதான் வெற்றிப் படிகட்டா? வைரலாகும் இளைஞரின் வித்தியாச முயற்சி...
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?
IPL-ல் அமலாகும் புதிய விதி! மாற்று வீரர்களுக்கு லக்கா? லாக்கா?...
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு
மாமன் படக்குழுவினரின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு...
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் - தனுஷ் படத்தில் எதிர்பாராத ஒற்றுமை.. என்ன தெரியுமா?...
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!...
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மனநல காப்பீடு எப்படி வேலை செய்கிறது? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!
அவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன்- விஜய் சேதுபதி!...