AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Instagram : வீடியோ எடிட்டிங் இனி ஈஸி.. புதிய எடிட்ஸ் செயலியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்!

Instagram Launches Edits App | இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் தங்களது வீடியோக்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயலிகளில் எடிட் செய்து பதிவிடுகின்றனர். அத்தகைய பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக புதிய வீடியோ எடிட்டிங் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

Instagram : வீடியோ எடிட்டிங் இனி ஈஸி.. புதிய எடிட்ஸ் செயலியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jun 2025 00:14 AM IST

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் விரும்பி பயன்படுத்தும் செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளது. இந்த செயலி, தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமின்றி பொழுதுபோக்குக்கும் மிக சிறந்ததாக உள்ளது. இதன் காரணமாக, இந்த செயலிக்கு பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியை பொருத்தவரை ரீல்ஸ் மிகவும் பிரபலமான அம்சமாக உள்ளது. பயனர்கள் ரீல்ஸ் பார்ப்பது மட்டுமன்றி, தாங்களும் ரீல்ஸ் வீடியோக்களை தயாரித்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவ்வாறு ரீல்ஸ் போடும் பயனர்களுக்கு உதவும் வகையில், இன்ஸ்டாகிராம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன செயலி, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள ரீல்ஸ் அம்சம்

இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் அம்சம் பயனர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பாடல்களுக்கு வாய் அசைப்பது, திரைப்பட காட்சிகளை நடிப்பது, சுயமாக பாடுவது, நடனமாடுவது உள்ளிட்டவற்றை செய்ய முடியும். இத்தகை ரீல்ஸ் வீடியோக்களை சிலர் பொழுதுபோக்கிற்காக செய்தாலும், சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு பணமும் சம்பாதிக்கின்றனர்.

இந்த நிலையில், ரீல்ஸ்கள் மிகவும் தரமானதாகவும், பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வீடியோக்களை எடிட் செய்வதை பயனர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ரீல்ஸ் வீடியோக்களை எடிட் செய்ய செயலிகள் வேண்டும். சில செயலிகள் வீடியோக்களை எடிட் செய்ய கட்டணம் வசுலிக்கின்றன. இந்த நிலையில் தான், பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக எடிட்ஸ் என்ற எடிட்டிங் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமின் எடிட்ஸ் செயலி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

  • இன்ஸ்டாகிராமின் இந்த எடிட்ஸ் செயலி வீடியோக்களை எளிமையாகவும், கிரியேட்டிவாகவும் எடிட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • எடிட்டிங்கில் அனுபவம் மிக்கவர், அனுபவம் இல்லாதவர் ஆகிய அனைவருமே மிக சுலபமாக எடிட் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலியை பயன்படுத்தி எடிட் செய்யப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மாறாக நேராக இன்ஸ்டாவிலே பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
  • இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த செயலி இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தும் நபர்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பதிவிடும் இன்ஃப்ளூயன்சர்கள் ஆகியோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us