ஏர்டெல் முதல் ஜியோ வரை.. ஓடிடி உடன் கிடைக்கும் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
Recharge Plans with OTT | இந்தியாவில் உள்ள முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்த நிலையில், ஓடிடி சேவைகள் உடன் கிடைக்கும் ரீச்சார்ஜ் திட்டங்கள் குறித்தும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் (Recharge Plans) விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக அதிக பணம் செலுத்தி ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ரீச்சார்ஜுக்கே இந்த நிலை என்றால் ஓடிடி தளங்களை பார்ப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், ஓடிடி தளங்களுடன் உள்ள ரீச்சார்ஜ் திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் இரண்டு பலன்களையும் ஒன்றாக பெற முடியும். அத்தகைய ரீச்சார்ஜ் திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓடிடியுடன் கிடைக்கும் ரீச்சார்ஜ் திட்டங்கள்
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் ஓடிடியுடன் கிடைக்கும் ரீச்சார்ஜ் திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.1,799-க்கான ஜியோ ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார், 50ஜிபி ஜியோ ஏஐ கிளவுட், நெட்ஃபிளிக்ஸ் பேசிக், ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. மேலும், தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி வாய்ஸ் கால் மற்றும் தின்சரி 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த கால அளவு 90 நாட்கள் ஆகும்.




ரூ.1,299-க்கான ஜியோ ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார், 50ஜிபி ஜியோ ஏஐ கிளவுட், நெட்ஃபிளிக்ஸ் பேசிக் ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. மேலும், தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி வாய்ஸ் கால் மற்றும் தின்சரி 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த கால அளவு 90 நாட்கள் ஆகும்.
இதையும் படிங்க : குறைந்தபட்ச ரீச்சார்ஜ் இனி 249-க்கு கிடைக்காது.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல்!
ரூ.1199-க்கான ஏர்டெல் ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் பிரீமியம் 22+ ஓடிடி, நெட்ஃபிளிக்ஸ் பேசிக், ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. மேலும், தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி வாய்ஸ் கால் மற்றும் தின்சரி 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த கால அளவு 84 நாட்கள் ஆகும்.
ரூ.1,029-க்கான ஜியோ ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் லைட், ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் மொபைல் ஓடிடி சேவைகள் கிடைக்கின்றன. மேலும், தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி வாய்ஸ் கால் மற்றும் தின்சரி 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த கால அளவு 90 நாட்கள் ஆகும்.
ரூ.838-க்கான ஏர்டெல் ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. மேலும், தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி வாய்ஸ் கால் மற்றும் தின்சரி 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த கால அளவு 84 நாட்கள் ஆகும்.
இதையும் படிங்க : இ-சிம் கார்டு எப்படி பயன்படுத்துவது? அதன் நன்மைகள் என்ன?
ரூ.598-க்கான ஏர்டெல் ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய ஓடிடி சேவைகள் கிடைக்கின்றன. மேலும், தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி வாய்ஸ் கால் மற்றும் தின்சரி 100 குறுஞ்செய்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த கால அளவு 28 நாட்கள் ஆகும்.
ரூ.279-க்கான ஏர்டெல் ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்டிரீம் பிரீமியம், நெட்ஃபிளிக்ஸ் பேசிக், ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. மேலும், ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.