Google Veo 3: இனி இலவசமாக ஏஐ வீடியோக்களை உருவாக்கலாம் – எப்படி தெரியுமா?
Google Veo 3 : சமூக வலைதளங்களில் தற்போது பெரும்பாலும் ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் தான் அதிகம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் கூகுகள் நிறுவனம் வியோ 3 என்ற புதிய ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலவசமாக ஏஐ வீடியோக்களை உருவாக்கலாம்.

தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ (AI) நுழைந்து வருகிறது. வருங்காலங்களில் இதன் இன்னும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் பெரும்பாலான விடியோக்கள் ஏஐ ஆல் உருவாக்கப்பட்டது தான். இந்த நிலையில் கூகுள் நிறுவனம் வியோ 3 (Veo 3) என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நமது கற்பனைகளுக்கு ஏற்ப ஏஐ வீடியோக்களை உருவாக்க முடியும். இந்த சேவை தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த முறையில் ஒவ்வொரு பயனரும் இலவசமாக 3 வீடியோக்களை உருவாக்கலாம். தற்போது வரை 8 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோவை 720p ரெசல்யூசன் வீடியோவை சில விநாடிகளில் உருவாக்க முடியும்.
வியோ 3 மூலம் வீடியோவை எப்படி உருவாக்குவது?
- உங்கள் ஸ்மார்ட் அல்லது கம்ப்யூட்டரில் ஜெமினி ஆப் அல்லது ஜெமினி இணைய முகவரிக்கு செல்லவும்.
- Search Bar-ல் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Create a Video with Veo என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் உருவாக்கவிரும்பும் காட்சிகளை விவரித்து பதிவிடவும். நீங்ள் கேட்ட வீடியோ சில விநாடிகளில் கிடைக்கும்.
இதையும் படிக்க : கூகுள் போட்டோஸில் இனி இவை எல்லாம் தெரிந்துக்கொள்ளலாம்.. என்ன என்ன தெரியுமா?
உதாரணமாக மாயாஜாலமான காட்டுப்பகுதியில் சிங்கம் ஒன்று நடந்து வருகிறது. சிங்கம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தீப்பொறிகள் பறக்கின்றன. சுற்றிலும் பரபரப்பு இசை கேட்கிறது என நீங்கள் பதிவிட்டால், அதற்கு ஏற்ப வியோ 3 உங்களுக்கு வீடியோவை உருவாக்கி கொடுக்கும்.
அல்லது உண்மையான காட்சியை உருவாக்கலாம். உதாரணமாக சென்னையில் மழை சாரல் அடிக்கிறது. ஒரு பெண் குடை பிடித்த படி வருகிறார். பின்னால் ஒரு மெலோடி பாடலின் இசை கேட்கிறது என குறிப்பிட்டால் அதற்கு ஏற்ப வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.
Veo 3 சிறப்பம்சங்கள்
வியோ 3 உருவாக்கும் வீடியோவில் நாம் விவரிக்கும் காட்சிகளுக்கு ஏற்ப ஒலிகள் மற்றும் இசை தானாக சேர்க்கப்படும். இது வீடியோவை உணர்ச்சிமிக்கதாக, உண்மைக்கு நெருக்கமாக மாற்றுகிறது. வீடியோ குறித்த பெரிய அனுபவம் இல்லாதவர்களாலும், தங்கள் கற்பனையை சொல்லி வீடியோ உருவாகக்கலாம். தற்போது ஜெமினி ஆப் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் வீடியோ உருவாக்கலாம்.
இதையும் படிக்க : ஒரே விநாடியில் நெட்ப்ளிக்ஸ் முழுவதையும் டவுன்லோடு செய்யலாம் – ஜப்பானின் அதிவேக இண்டர்நெட்!
- ஜெமினி ஆப் சென்னு Create a Video என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பமான காட்சியை விரிவாகவும், தெளிவாகவும் உள்ளிடவும்.
- வீடியோவை Cinematic, Realistic, Animated ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி உருவாக்கலாம். இது ஏஐ கருவி புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
- அது தானாகவே ஒலி மற்றும் இசைகளை சேர்க்கும். நாமும் நமக்கு விருப்பமான முறையில் இசை கேட்கலாம்.
- சில விநாடிகளில் உங்கள் வீடியோவை டவுன்லோடு செய்யலாம்.