Google Photos : கூகுள் போட்டோஸில் இனி இவை எல்லாம் தெரிந்துக்கொள்ளலாம்.. என்ன என்ன தெரியுமா?
Google Photos New Features | ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் கூகுள் போட்டோஸில் சேகரிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் புகைப்படங்களை கூகுள் அவ்வப்போது நினைவூட்டும். இது சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். முன்னதாக கூகுள் போட்டோஸ் நினைவூட்டும் இந்த புகைப்படங்களில் ஒருசில தகவல்கள் மட்டும் காட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக மேலும் சில தகவல்கள் காட்டப்படுகிறது.

நாம் எடுக்கும் புகைப்படங்கள் நாளடைவில் நினைவுகளாக மாறிவிடுகின்றன. எப்போதாவது எடுத்த புகைப்படத்தை திடீரென பார்க்கும்போது அது அந்த பழைய நினைவை நமக்கு மீண்டும் நினைவூட்டும். இவ்வாறு மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவர்களுக்கு மறக்க முடியாததாக மாற்றக்கூடிய தன்மை புகைப்படங்களுக்கு உள்ளன. இவ்வாறு மனிதரகளுக்கு அவர்களது புகைப்படங்களை சேமித்து நினைவூட்டும் பணிகளை கூகுள் போட்டோஸ் (Google Photos) செயலி செய்து வந்தது. இதுவரை கூகுள் போட்டோஸில் ஒருசில தகவல்கள் மட்டுமே காட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் பல தகவல்கள் அதில் காட்டப்படுகிறது. இது ஒரு புகைப்படத்தை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகிறது. இந்த நிலையில், கூகுள் போட்டோஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேலும் சில புதிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நினைவுகளை சேகரித்து தொகுப்பாக வழங்கும் கூகுள் போட்டோஸ்
நாம் எடுக்கும் புகைப்படங்களை ஸ்மார்ட்போன்களில் சேகரித்து வந்த நிலையில், கூகுள் கணக்கின் மூலம் கூகுள் போட்டோஸில் மிக எளிதாக சேகரித்து வைக்க முடியும். அதாவது, ஒருவர் பயன்படுத்தும், புகைப்படங்களை எடுக்கும் ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கு இருந்தால் போதும். புகைப்படங்களை சேகரிப்பதற்கான அனுமதியை நீங்கள் கொடுத்த பிறகு, நீங்கள எடுக்கும் புகைப்படங்கள் தானாகவே அந்த கூகுள் போட்டோஸில் சேகரிக்கப்படும்.
இதையும் படிங்க : உங்கள் பெயரை ஈஸியாக கூகுள் டூடுலாக மாற்றலாம் – எப்படி தெரியுமா?




இந்த புகைப்படங்களை அவ்வப்போது அது நினைவூட்டும். அதாவது 2024, ஜூலை 22 ஆம் தேதி நீங்கள் ஒரு புகைப்படத்தை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சரியாக அடுத்த வருடம் அதே நாளில் அதாவது 2025, ஜுலை 22 ஆம் தேதி அந்த புகைப்படத்தை கூகுள் உங்களுக்கு நினைவூட்டும். இதுவரை கூகுள் இவ்வாறு நினைவூட்டும் புகைப்படங்களில் இடம் மற்றும் தேதி மற்றும் தான் இடம் பெற்றிருக்கும். ஆனால், தற்போது இதில் மேலும் பல சிறப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : கூகுளில் விரைவாக தகவல்களை பெற வேண்டுமா? இந்த முக்கிய டிப்ஸை டிரை பண்ணுங்க!
கூகுள் போட்டோஸில் வந்த மேலும் சில சிறப்பு அம்சங்கள்
கூகுள் போட்டோஸில் இதுவரை இடன் மற்றும் தேதி உள்ளிட்ட இடங்கள் மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது கூடுதலாக பல சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது கூகுள் போட்டோஸில் புகைப்படத்தை என்று எடுத்தோம், எந்த மாடல் ஸ்மார்ட்போனில் எடுத்தோம், அந்த புகைப்படம் எந்த அப்பச்சர் (Aperture) மற்றும் ஷட்டர் ஸ்பீடில் (Shutter Speed) எடுக்கப்பட்டுள்ளது, அதில் உள்ள கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தையும் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.