உங்கள் பெயரை ஈஸியாக கூகுள் டூடுலாக மாற்றலாம் – எப்படி தெரியுமா?
Personalise Google Doodle Easily : கூகுள் குரோம் புரௌசரில் மை டூடுல் என்ற எக்ஸ்டென்ஷனைச் சேர்ப்பதன் மூலம், கூகுள் ஹோம் பக்கத்தில் வரும் டூடுலை உங்கள் பெயர் மற்றும் நீங்கள் புகைப்படத்துடன் மாற்றிக்கொள்ளலாம். இது அடிக்கடி கூகுள் குரோம் பயன்படுத்துவர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளிக்கும்.

உங்கள் பெயரே கூகுள் டூடுலாக இருந்தால் எப்படி இருக்கும்? ஆம், தற்போது கூகுள் குரோம் (Google Chrome) புரௌசரில், கூகுள் டூடுலை (Google Doodle) உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் பிரொஃபைலுக்கு தனித்துவத்தை கூட்டும் வகையில் இந்த வாய்ப்பை கூகுள் வழங்குகிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனர் லாரி பேஜ் மற்றும் சர்ஜி பிரின் ஆகியோர் அலுவலகத்தில் இல்லை என்பதை அறிவிப்பதற்காக, கூகுள் லோகோவில் ஒரு சிறிய படம் சேர்க்கப்பட்டது. இது தான் கூகுள் டூடுலின் துவக்கமாக கருதப்படுகிறது. அன்றிலிருந்து கூகுள் உலக அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், முக்கிய தலைவர்களை நினைவுபடுத்தும் வகையில் கூகுள் டூடுலை மாற்றி வருகிறது. தற்போது நமது பெயரை கூகுள் டூடுலாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் கூகுள் வழங்குகிறது.
விளையாட்டு, கல்வி, கலாசாரம், அரசியல் நிகழ்வுகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களின் நினைவு நாட்கள் ஆகியவற்றை மக்களுடன் கொண்டாடும் விதமாக, கூகுள் டூடுல் அடிக்கடி மாற்றப்படுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது கூகுள் டூடுல் உங்கள் பெயர் மற்றும் விருப்ப படங்களுடன் மாற்றிக்கொள்ளும் வசதியை தற்போது பயனர்களுக்கு வழங்குகிறது.
உங்கள் கூகுள் குரோமில் உங்கள் பெயருடன் டூடுள் உருவாக்குவது எப்படி?
-
கூகுள் குரோம் புரௌசரை ஓபன்செய்யவும், அதில் சர்ச் பாக்ஸில் “Chrome Extensions” என Search செய்யவும்.
இதையும் படியுங்கள்இந்தியாவில் அறிமுகமான கூகுள் ஏஐ மோட் – இதன் சிறப்பம்சங்கள் என்ன?கூகுள் மேப்ஸில் இருக்கும் இந்த ஆப்சன்ஸ் பத்தி தெரியுமா ? உங்கள் பயணம் எளிதாகும்!Instagram : இனி உங்களுக்கு பிடித்தபடி Profile-ஐ வடிவமைக்கலாம்.. இன்ஸ்டாகிராமில் வரப்போகும் அசத்தல் அம்சம்!ஒரே நமிடத்தில் ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF-ஆ மாற்றலாம் – கூகுள் டிரைவின் இந்த வசதி பத்தி தெரியுமா? -
கிடைக்கும் முடிவுகளில் Chrome Web Store என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
-
பின்னர் ஸ்டோரில் உள்ள ‘Search extensions and themes’ பகுதியில் My Doodle எனத் தேடவும்.
-
பின்னர் My Doodle என்ற எக்ஸ்டென்ஷனை தேர்வு செய்து Add to Chrome என்பதை கிளிக் செய்யவும்.
-
பாப் அப் பாக்ஸில் “Add Extension” என்பதை கிளிக் செய்து உறுதி செய்யவும்.
-
இப்போது உங்களது Chrome புரௌசரில், search bar அருகில் My Doodle ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.
-
Text tab-இல் உங்கள் விருப்பமான பெயரை அல்லது வாசகத்தை டைப் செய்யலாம்.
-
Image tab-இல் நீங்கள் பயன்படுத்த விரும்பும் படத்தின் URL-ஐ அளிக்கவும்.
இதன் பிறகு நீங்கள் அளித்த பெயர், மற்றும் படங்கள் ஆகியவை கூகுள் குரோம் ஹோம்பேஜில் காட்டப்படும். கூகுள் குரோம் புரௌசரில், சிறிய அமைப்பை மாற்றுவதன் மூலம், உங்கள் Google முகப்புப் பக்கத்தை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றலாம். இது அடிக்கடி கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளிக்கும். இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம்.