AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் அறிமுகமான கூகுள் ஏஐ மோட் – இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Google AI Mode : கூகுள் இந்தியாவில் புதிய ஏஐ மோட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம், வழக்கமான தேடல்களைவிட சிக்கலான மற்றும் பல அடுக்குகளுடன் கூடிய கேள்விகளுக்குப் பதிலளிக்க உருவாக்கப்பட்டுள்ளது. இது Google Gemini 2.5 AI மாடலில் இயங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன? அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமான கூகுள் ஏஐ மோட் – இதன் சிறப்பம்சங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jun 2025 20:33 PM IST

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) வருவதற்கு முன் நமக்கு கூகுள் தான் ஏஐ. நமக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் கூகுளில் (Google) தேடி பெற்று வந்தோம். அந்த அளவுக்கு கூகுளில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். இந்த நிலையில் கூகுள் நிறுவனமானது இந்தியாவில் கூகுள் ஏஐ மோட் (Google AI Mode) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் வழக்கமான தேடல்களைவிட அதிக துல்லியமான, விவரமான மற்றும் நமது தேடல்களின் அடிப்படையிலான பதில்களை வழங்குகிறது. இதன் மூலம் கூகுளின் தேடல் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டுரையில் கூகுள் ஏஐ மோடின் சிறப்பம்சங்கள் என்ன? எப்படி பயன்படுத்துவது?  என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுளின் ஏஐ மோட் என்பது என்ன?

ஏஐ மோட் என்பது கூகுள் தேடலில் இயங்கும் ஒரு புதிய ஏஐ அம்சமாகும். இது Google Gemini 2.5 AI மாடலின் மூலம் செயல்படுவிருக்கிறது.  இது வழக்கமான கீவேர்ட் தேடல்களைவிட ஆழமான, பல அடுக்குகளுடன் கூடிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், சூழ்நிலைகளுக்கு ஏற்ற பதில்களை வழங்கவும் உதவுகிறது.

கூகுள் ஏஐ மோட் குறித்து கூகுள் எக்ஸ் பதிவு

 

ஏஐயின் மோட்டின் சிறந்த அம்சங்கள்:

  • விவரமான பதில்கள்

    வாடிக்கையாளரின் கேள்வியை பல சிறிய கேள்விகளாக பிரித்து, அதற்கான தகவல்களை தேடி, ஒருங்கிணைந்த பதிலாக வழங்கும். இதன் மூலமான விவரமான பதில்கள் நமக்கு கிடைக்கும்.

  • தொடர்க் கேள்விகள் கேட்கலாம்

    நீங்கள் ஒரு பதிலை பெற்ற பின்பு அதில் இருந்து மேலும் கேள்விகளை தொடரலாம். உதாரணமாக, ஒரு விளையாட்டைக் குறிப்பிட்டு, இந்த விளையாட்டுகளில் குழந்தைகள் தனியாக விளையாட முடியுமா? என்பதுபோன்ற கேள்விகளைக் கேட்கலாம். இதன் மூலம் அந்த விளையாட்டு குறித்து அனைத்து விவரங்களையும் நமக்கு அளிக்கும்.

  • மைக் பயன்படுத்தி குரல் மூலமாகவும், போட்டோவை பயன்டுத்தி கேள்விகள் கேட்கலாம்

    கேள்விகளை வழக்கமான டெக்ஸ்ட் வடிவில் மட்டும் கேட்காமல் மைக்ரோஃபோன் ஐகானை பயன்படுத்தி குரல்வழியாகவும், கூகுள் லென்ஸ் மூலம் படங்களை அடிப்படையாகவும் கேள்விகள் கேட்கலாம். உதாரணமாக ஒரு செடியின் புகைப்படத்தைப் பதிவேற்றியபின், அதனை எப்படி பராமரிப்பது என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.

  • கூகுளின் கூடுதல் வசதிகள் மூலம் பதில் தரும்

    கூகுளின் Knowledge Graph, ரியல் டைம் தகவல்கள் போன்றவற்றை இணைத்து பதில்கள் வழங்கப்படுகிறது.

  • பழைய தேடல் முறை

    சில நேரங்களில் ஏஐ பதிலளிக்க தயங்கும் போது வழக்கமான கூகுள் தேடல் முடிவுகளுக்கு திரும்பும். இது பயனர்களுக்குப் பின்பற்றப்படும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

ஏஐ மோடை எப்படி பயன்படுத்தலாம்?

  • உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் போனில் கூகுள் செயலியை ஓபன் செய்யவும்.
  • மேலே உள்ள சர்ச் லேப்ஸ் ஐகானை  கிளிக் செய்யவும்.
  • அதில் AI Mode ஐ தேர்வு செய்து Join Experiment கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேடலை குரல், டெக்ஸ்ட் அல்லது படம் மூலமாக அனுப்பவும்.
  • AI Mode உங்கள் கேள்விக்கான விவரமான பதிலை வழங்கும்.
  • இப்போது இந்த அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

Follow Us