AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Google : இனி சைகை மொழியையும் மொழிப்பெயர்க்க முடியும்.. கூகுள் அதிரடி!

Google Sign Language Translator | கூகுள் நிறுவனம் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், சைகை மொழியை மொழிப்பெயர்த்து வார்த்தைகளாக வடிவம் பெற்று தரும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Google : இனி சைகை மொழியையும் மொழிப்பெயர்க்க முடியும்.. கூகுள் அதிரடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 May 2025 09:19 AM IST

தொழில்நுட்பம் (Technology) நாளுக்கு  நாள் மிக வேகமாக வளர்ந்துக்கொண்டே செல்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்துமே சாத்தியமாகிறது. மனிதர்களின் வாழ்வியலை மேம்படுத்தவும், கடினப்பட்டு செய்த வேலைகளை மிகவும் எளிதாக செய்து முடிக்கவும் இந்த இந்த தொழில்நுட்ப வசதிகள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில், வாய் பேச முடியாதவர்களுக்கும் அவர்களிடம் பேசும் நபர்களுக்கும் உதவும் வகையில் புதிய அம்சம் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம், எப்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது, அதன் சிறப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உரையாடுவதில் சவால்களை எதிர்க்கொள்ளும் வாய் பேச முடியாதவர்கள்

கூகுள் மொழிப்பெயர்ப்பு அம்சம் வருவதற்கு முன்பாக பேசுவதற்கு மொழி ஒரு பெரிய தடையாக இருந்தது. ஆனால், கூகுளின் மொழிப்பெயர்ப்பு அம்சம் மூலம் எந்த மொழியை வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழிப்பெயர்த்து அதற்கான அர்த்தத்தை புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், வாய் பேச முடியாதவர்களுக்கு அப்படியில்லை. அவர்கள் தங்களால் வாய் முடியாது என்பதால் அவர்கள் சைகை மொழியை (Sign Language) பயன்படுத்துகின்றனர்.

காதுகேட்காத, வாய் பேச முடியாத நபர்கள் அவர்களைபோலவே குறைபாடு கொண்டவர்கள் அல்லது சைகை மொழி பேச தெரிந்தவருடன் மட்டுமே சகஜமாக உரையாட முடியும். மற்றவர்களிடம் அவ்வாறு சகஜமாக உரையாடுவது கடினமாக இருக்கும். அவர்களும் எந்த வித தடையும் இன்றி மற்றவர்களுடன் உரையாட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு கூகுள் ஒரு புதிய முயற்சியில் கையில் எடுத்துள்ளது.

இனி சைகை மொழியையும் மொழிப்பெயர்க்க முடியும் – கூகுள் அதிரடி!

வாய் பேச முடியாத பலருக்கும் சைகை மொழி மிகவும் அவசியமாக உள்ளது. ஆனால், பலருக்கும் சைகை மொழி புரியாது. இந்த நிலையில் தான், செயற்கை நுன்னறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தால் ஆன SignGemma என்ற செயற்கை நுண்ணறிவு அம்சத்தை கட்டமைத்து வருகிறது. இதன் மூலம் சைகை மொழியை வார்த்தைகளாக மொழிப்பெயர்த்துக்கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், 2025 இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த அம்சம் மூலம் பேச்சு குறைபாடு உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us