AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

YouTube : ஐபோன் பயனர்களை யூடிபை Uninstall செய்ய சொன்ன கூகுள்.. காரணம் என்ன?

YouTube Issue for iPhone Users | கூகுள் நிறுவனத்தின் யூடியூப் செயலியை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், சில ஐபோன் பயனர்கள் யூடியூப் பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்தித்துள்ள நிலையில், அவர்களை யூடியூப் செயலியை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்ய கூகுள் அறிவுறுத்தியுள்ளது.

YouTube : ஐபோன் பயனர்களை யூடிபை Uninstall செய்ய சொன்ன கூகுள்.. காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jun 2025 13:18 PM IST

உலக அளவில் அதிக மக்களால், அதிகம் பயன்படுத்தும் முக்கிய செயலியாக கூகுள் (Google) நிறுவனத்தின் யூடியூப் (YouTube) உள்ளது. பலரும் தங்களது அன்றாட வாழ்வில் யூடியூப் பயன்படுத்தும் நிலையில், சில பயனர்களை கூகுள் யூடியூப் செயலியை அன்இன்ஸ்டால் (Uninstall) செய்யுமாறு கூறியுள்ளது.  ஏராளாமான ஐபோன் பயனர்கள் தொடர்ந்து யூடியூபில் சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில், கூகுள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கூகுளின் இந்த அறிவிப்பு குறித்தும், ஐபோன் பயனர்களின் சிக்கல்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் யூடியூப் செயலி

கூகுள் நிறுவனம் பல செயலிகளை பொதுமக்களின் பயன்பாட்டில் வைத்துள்ளது. அந்த வகையில், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஏராளமான மக்கள் பயன்படுத்தக்கூடியதாக உள்ள செயலி தான் யூடியூப். ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் கூகுளின் யூடியூப் உள்ளிட்ட செயலிகள் இன்பில்ட் (Inbuilt) ஆக இருக்கும் நிலையில், ஐபோன்களில் அவ்வாறு இருக்காது. ஐபோன்களில் யூடியூப் தனியாக தான் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தேவைப்படும் ஐபோன் பயனர்கள் யூடியூப்  செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்வார்கள்.

யூடியூப் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய கூறிய யூடியூப்

யூடியூப் செயலியை ஏராளமான ஐபோன் பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், சில பயனர்கள் யூடியூப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் கூகுள் நிறுவனம் பயனர்களை தங்களை யூடியூப் செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யுமாறு கூறியுள்ளது. இது குறித்து யூடியூபின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது, யூடியூபை மறுபடியும் இன்ஸ்டால் செய்வதன் மூலம் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us