Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே நமிடத்தில் ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF-ஆ மாற்றலாம் – கூகுள் டிரைவின் இந்த வசதி பத்தி தெரியுமா?

Quick PDF with Drive : டாக்குமென்ட்களை ஸ்கேன் செய்து பிடிஎஃபாக மாற்றுவது மிகவும் சவாலான பணி. அப்படியே இருந்தாலும் அதனை செய்வதற்கு மிகவும் நீண்ட நேரமாகும். இந்த நிலையில் கூகுள் டிரைவ் பயன்படுத்தி எளிமையாக, சில விநாடிகளில் ஸ்கேன் செய்து பிடிஎஃபாக மாற்றலாம்.

ஒரே நமிடத்தில் ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF-ஆ மாற்றலாம் – கூகுள் டிரைவின் இந்த வசதி பத்தி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 07 Jun 2025 21:19 PM

நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் படிப்பு வேலை, அரசு திட்டங்கள் போன்ற பணிகளுக்கு ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ்கள்  என அடிக்கடி ஸ்கேன் செய்து பிடிஎஃப் (PDF)  ஆக மாற்ற வேண்டியிருக்கிறது. பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்கிறார்கள். ஆனால், ஆவணங்களை ஸ்கேன் செய்து, பிடிஎஃப்பாக மாற்றுவது தான் இருப்பதிலேயே மிகப்பெரும் சவால். சில ஆப்கள் மற்றும் இணையதளங்கள்  இந்த சேவையை இலவசமாக வழங்கினாலும், குறிப்பிட்ட சில முறைகளுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கின்றன. மேலும் அவை பாதுகாப்பானதா என்றாலும் சந்தேகம் தான்.  இந்த நிலையில் இதை எல்லாம் ஒரே நிமிடத்தில் இலவசமாகவும் பாதுகாப்பாகவும் செய்வதற்கு கூகுள் டிரைவ் (Google Drive) ஒரு சிறப்பான வசதியை வழங்குகிறது. இது பற்றிய முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.

கூகுள் டிரைவில் பிடிஎஃப் ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி?

  1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் டிரைவை ஓபன் செய்யுங்கள்.

  2. பின்பு, அதில் கீழே இருக்கும் பெரிய “+” பட்டனுக்கு மேலே இருக்கும் கேமரா ஐகானை கிளிக் செய்யவும்.

  3. இதனை வேகமாக செய்ய விரும்பினால், ஹோம் ஸ்கிரீனில் கூகுள் டிரைவ் ஐகானை லாங் பிரஸ் செய்து அதில் ஸ்கேன் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.

  4. இப்போது நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் டாக்குமென்டை ஸ்கேன் செய்யலாம்.

  5. நிறைய பக்கங்கள் இருந்தால்  முதல் பக்கத்தை ஸ்கேன் செய்த பிறகு, More Pages? என்பதைத் தேர்ந்தெடுத்து, மற்ற பக்கங்களையும் ஸ்கேன் செய்யலாம்.

  6. பிறகு Done என்பதை கிளிக் செய்யவும்.

  7.  அந்த டாக்குமென்டிற்கு ஒரு பெயரை கொடுத்து, PDF அல்லது JPEG என தேர்ந்தெடுத்து Save செய்யவும்.

Google Drive-ல் ஸ்கேன் செய்த டாக்குமென்ட் PDF வடிவத்தில் தானாகவே உங்கள் போனில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் பிறருடன் பகிரலாம். அல்லது பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

இது ஒரு வினாடியில் ஆவணங்களை ஸ்கேன் செய்ய இது உதவுவதால் இது அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவசர காலத்தில் லேப்டாப்பை தேடிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்தே உங்களது டாக்குமென்ட்டை ஸ்கேன் செய்து பிடிஎஃப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.  படங்களை தனியாக  பிடிஎஃப்-ஆக மாற்றி கூகுள் டிரைவில் அப்லோட் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதால் நேரம் மற்றும் உழைப்பு இரண்டையும் குறைக்கிறது. மேலும் அரசு ஆவணங்கள், கல்வி டாக்குமென்ட்கள் மற்றும் வேலைக்கு தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து உடனே சேமிக்க இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அடிக்கடி டாக்குமென்ட்களை கையாள வேண்டியவர்கள், ஸ்கேன் செய்ய இந்த வசதியை கட்டாயமாக பயன்படுத்தி பாருங்கள். இதனால் நேரம் மிச்சமாவதோடு வேலை எளிமையாகும்.