AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி – இனி ஈஸியா தகவல்களைப் பெறலாம்!

Google Lens : யூடியூப் நம் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. இந்த நிலையில் யூடியூப் ஷார்ட்ஸில் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக கூகுள் லென்ஸ் அறிமுகப்படவுள்ளது. இந்த வசதி யூடியூப் ஷார்ட்ஸில் குறிப்பிட்ட விஷயங்களைப் பார்க்கும்போது அது குறித்த தகவல்களை உடனடியாக கூகுள் லென்ஸ் மூலம் தேடி தெரிந்துகொள்ளலாம்.

யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி – இனி ஈஸியா தகவல்களைப் பெறலாம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 May 2025 22:06 PM IST

யூடியூப் (Youtube) நம் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறிவிட்டது.  குறிப்பாக ஒரு காபி போட வேண்டும் என்றால் கூட யூடியூப் பார்த்து போடும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு அது  இரண்டறக் கலந்துவிட்டது. மேலும் யூடியூப் பலரை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது. இந்த நிலையில்  யூடியூப் ஷார்ட்ஸ் தற்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பயனர்களுக்கு மேலும் பயனுள்ள வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிய வசதியாக கூகுள் லென்ஸ் (Google Lens) இன்டிகிரேஷன் தற்போது யூடியூப் ஷார்ட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான வீடியோக்களைப் பார்ப்பதை விட, அவற்றில் காணப்படும் எந்த பொருளையாவது நேரடியாக தேடி, உடனடியாக தகவல் அறிய உதவும். இந்த வசதி உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூகுள் லென்ஸ் யூடியூப் ஷார்ட்ஸில் எப்படி வேலை செய்யும்?

இந்த புதிய வசதியின் மூலம், யூடியூப் ஷார்ட்ஸ் பயனர்கள் வீடியோவை ஒரு இடத்தில் நிறுத்தி, அதில் காணப்படும் ஒரு பொருள், கட்டிடம், ஆடைகள், எழுத்துக்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி உடனடியாக தகவல் பெற முடியும். முன்பு போல வேறு ஒரு டாபில் கூகுள் சர்ச் அல்லது ப்ரௌசர்க்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஷார்ட்ஸில் இருந்த படியே  லென்ஸ் வசதியின் மூலம் உரிய விளக்கங்கள், பொருட்கள் தொடர்பான விவரங்கள், இடம் தொடர்பான தகவல்கள் அல்லது மொழிபெயர்ப்பு என பல தரப்பட்ட விஷயங்களை பெற முடிகிறது.

இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது?

கிரியேட்டர்ஸ்க்கும் பார்வையாளர்களுக்கும் இரட்டைப் பலன் 

இந்த லென்ஸ் வசதி, விஷயங்களை உடனடியாக தேடுவதற்கும், வீடியோக்களில் உள்ள தயாரிப்புகளையோ, இடங்களையோ அல்லது ஆடைகளையோ பற்றி அறிந்து கொள்ள பயனர்களுக்கு உதவுகிறது. அதே சமயம், வீடியோ கிரியேட்டர்ஸ்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. ஏனெனில் தற்போது அவர்கள் விளம்பர பொருட்களை நெறிமுறைப்படி வீடியோவில் காட்டும் போது, பார்வையாளர்கள் அவற்றை நேரடியாக தேடி வாங்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

ஏற்கனவே ஷார்ட்ஸ் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பமான வீடியோ வடிவமாக மாறிவிட்டது. இதில் கூகுள் லென்ஸ் சேர்த்திருப்பது, சிறந்த பயனர் அனுபவத்தையும், உடனடி தகவல்களையும் வழங்கும் வழியாக உள்ளது. இந்த புதிய வசதி தற்போது உலக அளவில் யூடியூப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த முறை யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கும் போது, அதில் சந்தேகம் இருந்தால் உடனடியாக கூகுள் லென்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Follow Us