YouTube : யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்.. எப்படி தெரியுமா?
Hum and Whistle to Search Music Easily on YouTube | யூடியூபில் பாடல்கள், திரைப்படங்கள், வீடியோக்கள் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மக்கள் பாடல்களை கேட்க யூடியூபை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் யூடியூபில் பாடலை தேடுவதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளது பலருக்கும் தெரியாது.

உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு பாடல்களை கேப்டது, இசை கேட்பது மிகவும் பிடித்தமான செயல்களாக உள்ளது. பாடல்கள் அல்லது இசை கேட்பதன் மூலம் மனதிற்கு ஆதரவாகவும் மூலைக்கு புத்துணர்ச்சியும் கிடைப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. தனிமையில் இருப்பவர்கள், பயணம் செய்பவர்கள், சோகத்தில் இருப்பவர்கள் பாடல்கள் கேட்பதின் மூலம் குணமடைந்துள்ளனர். இவ்வாறு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமன்றி, மன ரீதியிலான பிரச்னைகளுக்கும் இசை மற்றும் பாடல்கள் தீர்வாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான இசை கேட்கும் செயலிகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
யூடியூப் மூலம் பாடல்களை கேட்க விரும்பும் பொதுமக்கள்
என்னதான் இசை மற்றும் பாடல்களை கேட்பதற்கு பல வகையான செயலிகள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் யூடியூப் (YouTube) மூலம் இசை கேட்பதையே அதிகம் விரும்புகின்றனர். காரணம் யூடியூபில் ஆடியோ மட்டுமன்றி, வீடியோ பாடல்களையும் கேட்க முடியும். ஒரு பாடலை அதன் வீடியோவுடன் சேர்ந்து கேட்பது பலருக்கும் மிகவும் பிடித்ததாக உள்ள நிலையில், பலரும் பாடல் கேட்பதற்கு யூடியூபை நாடுகின்றனர். யூடியூபில் சர்ச் (Search) செய்து பாடல்களை கேட்பதை தான் பலரும் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், யூடியூபில் பாடல்களை தேட வேண்டும் என்றால் அந்த பாடலின் திடக்க வரி, பாடல் வரிகள், திரைப்படத்தின் பெயர், நடிகர்களின் பெயர் உள்ளிட்டவற்றை வைத்து தான் தேட முடியும். இந்த முறை எல்லா பாடல்களை தேடுவதற்கும் உதவாது. ஏனென்றால், சில சமயங்களில் பாடலின் இசை மட்டுமே நியாபகம் இருக்கும். இத்தகைய சூழல்களில் பாடல்களை தேடுவது மிகவும் கடினமாக இருக்கும். அதற்குதான் யூடியூபில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, யூடியூபில் ஹம்மிங் (Humming) மற்று விசில் (Whistle) செய்து பாடல்களை தேடும் அம்சம் உள்ளது. இதன் மூலம் மிக சுலபமாக பாடல்களை தேடலாம்.
யூடியூபில் ஹம்மிங் மற்றும் விசில் செய்து பாடல்களை தேடுவது எப்படி?
- அதற்கு முதலில் யூடியூபுக்கு செல்ல வேண்டும்.
- அதில், சர்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அந்த சர்ச் ஆப்ஷனுக்கு அருகே உள்ள மைக் சின்னத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் மூலம் நீங்கள் எந்த பாடலை தேட விரும்புகிறீர்களோ அதன் ஹம்மிங் மற்றும் விசில் செய்யலாம்.
- அதனை தொடர்ந்து நீங்கள் தேடிய பாடல்கள் தோன்றும்.
- அதில் சரியான பாடலை தேர்வு செய்து நீங்கள் பாடலை கேட்கலாம்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக எளிதாக யூடியூபில் ஹம்மிங் மற்றும் விசில் செய்து பாடல்களை தேடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.