AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்- வைரலாகும் ஜோடியின் போட்டோ!

Aruna Sivaya Engagement: தமிழில் பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர். இதில் சூப்பர் ஸீன்கர் சீசன் 9ல் கலந்துகொண்டு, அந்த சீஸனின் டைட்டிலை தட்டிசென்றவர் அருணா. இவர் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். தற்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்- வைரலாகும் ஜோடியின் போட்டோ!
சூப்பர் சிங்கர் அருணாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Feb 2026 16:10 PM IST

தமிழ் சின்னத்திரையில் (Tv Show) மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் (Super Singer). இந்த நிகழ்ச்சியானது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Star Vijay TV) ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கடந்த 2006ம் ஆண்டில் முதல் முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் வாரம் தோறும் வெளியாகிவருகிறது. இதில் கடந்த 2023ம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 9 (Super Singer Season 9) நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் அருணா சிவாய (Aruna Sivaya) (அருணா ரவீந்திரன்) . இவருக்கு சகோதரி ஒருவரும் உண்டு. இரட்டியாளர்களான இவர்கள் இருவருமே பாடகர்கள்தான்.

அதில் அருணா ரவிச்சந்திரன் சூப்பர் சிங்கர் சீசன் 9ல் பாடகராக பாடி, மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் சைலண்டாக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவர் நிச்சயம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவரின் நிச்சயம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: யூத் ஜெனரேஷன் காதல் கதையில்.. ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

இணையத்தில் வைரலாகிவரும் சூப்பர் சிங்கர் அருணாவின் நிச்சயதார்த்த புகைப்படம் தொடர்பான பதிவு:

கடந்த 2022ம் – 2023ம் ஆண்டில் சிறப்பாக தமிழில் நடைபெற்றுவந்த ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், பி. உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், மற்றும் ஸ்வேதா மோகன் போன்றவர்கள் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் இறுதி போட்டிக்கு, அருணா ரவீந்திரன், பிரியா ஜெர்ஸன், பிரசன்னா ஆதிசேஷ, அபிஜித் அனில்குமார் மற்றும் பூஜா வெங்கட்ராமன் போன்ற பாடகர்கள் சென்றிருந்தனர். இதில் சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னராக அருணா வெற்றி பெற்றிருந்தார்.

இதையும் படிங்க: முதல் முறையாக அதை முயற்சிக்கிறேன்.. டி55 பட கதை இதுதான் – மாரி செல்வராஜ் பேச்சு!

இதை அவருக்கு ரூ 60 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் ரூ 10 லட்சம் ரொக்க தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. அருணாவின் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த விதத்தில் இவர் தற்போதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களிலும் பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவரின் திருமண தேதி எப்போது என அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us