யூடியூபை விளம்பரங்கள் இல்லாம பார்க்கணுமா? இந்த டிரிக்ஸை யூஸ் பண்ணுங்க!
Ad-Free YouTube Tips : இன்றைய காலகட்டத்தில் யூடியூப் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது. ஆனால் அதன் அதிகப்படியான விளம்பரங்கள் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க 5 சுலபமான ஹேக்குகளை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் (Youtube) தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறியிருக்கிறது. கல்வி (Education), தகவல், பொழுதுபோக்கு, தொழில் வளர்ச்சி என பல விதமான தேவைகளுக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யூடியூபை பயன்படுத்துகிறார்கள். இந்திய அளவில் லட்சக்கணக்கான மக்களை யூடியூப் தொழில்முனைவோராக மாற்றி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய கிரியேட்டர்களுக்காக யூடியூப் ரூ. 21, 000 கோடியை யூடியூப் வழங்கியிருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ நீல் மோகன் அறிவித்திருக்கிறார். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.850 கோடியை யூடியூப் வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு இளைஞர்களை யூடியூப் தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறது.
யூடியூபிற்கு பெருமளவில் வருவாய் அதன் விளம்பரம் மூலம் கிடைத்து வருகிறது. ஆனால் யூடியூபில் உள்ள முக்கியமான பிரச்னை, வீடியோக்களை பார்க்கும்போது குறுக்கே இந்த கௌஷிக் வந்தா என்பது போல குறுக்கிடும் விளம்பரங்கள் மக்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. விளம்பரம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றால் யூடியூப் பிரீமியமிற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அனைவருக்கும் பொறுத்தமாக இருக்காது. இந்த நிலையில் யூடியூபை விளம்பரம் இல்லாமல் பார்க்க சில டிரிக்ஸ் இருக்கின்றன. அதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வீடியோக்களை ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்யுங்கள்
யூடியூபில் விருப்பமான வீடியோக்களை பதிவிறக்கம் செய்து வைப்பது ஒரு நல்ல தீர்வு. குறிப்பாக நமக்கு பிடித்த மான பாடல்களை டவுன்லோடு செய்யும் போது அதனை எந்த நேரமும் விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம். மேலும் அதற்கு இண்டர்நெட் பயன்பாடும் தேவையில்லை. மேலும் இந்தியா போன்ற சில நாடுகளில் வீடியோக்களை இலவசமாக பதிவிறக்க யூடியூப் அனுமதிக்கிறது. இது உங்கள் விருப்பவிஷயங்களை ads இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பார்வையிட உதவும்.
Ad Blocker பயன்படுத்துங்கள்
உங்கள் புரோசரில் UBlock Origin, AdBlock Plus போன்ற extensions-ஐ நிறுவினால், யூடியூப் வீடியோக்களில் வரும் விளம்பரங்களை தானாகவே தடுத்து விடும். இதனால் உங்கள் வீடியோ அனுபவம் சீராகவும் வேகமாகவும் இருக்கும். Chrome, Firefox, Microsoft Edge ஆகிய அனைத்து புரோசர்களிலும் இதனை பயன்படுத்தலாம்.
Dot (.) Trick – ஒரு புள்ளி வைத்து விளம்பரம் தவிர்க்கலாம்
இது மிகவும் எளிமையான ஒரு ஹேக். நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவின் URL-ல் .com
உடன் ஒரு புள்ளி சேர்க்கவும். உதாரணமாக https://www.youtube.com/watch?v=xxxxx
என்ற யுஆர்எல்லில் https://www.youtube.com./watch?v=xxxxx
என்று மாற்றுங்கள். Enter அழுத்தியவுடன், அந்த வீடியோ விளம்பரமில்லாமல் இயக்கப்படும். இது சில நேரங்களில் சிறப்பாக வேலை செய்யும்.
யூடியூபிற்கு மாற்றாக வேறு ஆப்களை பயன்படுத்தலாம்
NewPipe, Vimeo, Invidious போன்ற பிற ஆப்களை பயன்படுத்தினால் யூடியூப் வீடியோக்கள் விளம்பரமில்லாமல் பார்க்கலாம். குறிப்பாக NewPipe ஒரு ஒரு ஓபன் சோர்ஸ் ஆப்பாக ஆக இருக்கிறது. இதில் subscriptions, playlists, download போன்ற வசதிகளும் உண்டு. ஆனால் இது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடையாது. நீங்கள் அதை GitHub அல்லது F-Droid-ல் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும்.