Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யூடியூபின் புதிய விதிகளால் யாருக்கெல்லாம் பாதிப்பு? – தவிர்ப்பது எப்படி ?

YouTube Monetization Rule Change : ஜூலை 15 2025 அன்று முதல் யூடியூப் மானிடைசேஷன் விதிகளில் பெரிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக சில கிரியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் சரியான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த மாற்றங்களால் வரும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

யூடியூபின் புதிய விதிகளால் யாருக்கெல்லாம் பாதிப்பு? – தவிர்ப்பது எப்படி ?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Jul 2025 19:54 PM

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், யூடியூப் (Youtube) வெறும் பொழுதுபோக்கு தளம் மட்டும் இல்லை. மாறாக, அது உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு வருமான ஆதாரமாக மாறியுள்ளது. பலர் யூடியூப் மூலம் கிரியேட்டர்களாக (Creators) மாறி புகழுடன் வருமானமும் பெற்று வருகின்றனர். குறிப்பாக யூடியூப் ஷார்ட்ஸ் என்ற அம்சம், பலருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் களமாக மாறியுள்ளது. இதன் மூலம் பலரும் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். இந்த நிலையில்  யூடியூப் அதன் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்யப் போகிறது, இது ஜூலை 15, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த மாற்றம் யூடியூப் மூலம் வருமானம் ஈட்டி வரும் அனைவரின் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் யூடியூப் கிரியேட்டராக இருந்தாலோ அல்லது புதிதாக யூடியூபில் வீடியோக்களை உருவாக்கி பணம் சம்பாதிக்க விரும்பினாலோ, இந்த தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

வருவாய் விதிகளில் மாற்றங்கள்

யூடியூப் இப்போது அதன் பார்ட்னர் புரோகிராம் திட்டத்தில் (YPP) புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது படைப்பாளிகள் விளம்பர வருவாய்  உள்ளிட்டவை மூலம் சம்பாதிப்பதற்கான கதவுகளைத் திறக்கும். ஆனால் இதற்காக சில புதிய நிபந்தனைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிக்க : சிறுவர்கள் Influencer ஆவதில் சிக்கல்.. விதிகளை கடுமையாக்கிய யூடியூப்!

யூடியூபல் சேர தேவையான நிபந்தனைகள்

  • குறைந்தது 500 சப்கிரைபர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • கடந்த 90 நாட்களில் குறைந்தது 3 வீடியோக்களைப் பதிவேற்றியிருக்க வேண்டும் அல்லது 12 மாதங்களில் 3,000 மணிநேரப் பார்வை நேரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
  • இது தவிர, ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு  90 நாட்களில் 3 மில்லியன் பார்வைகள் இருக்க வேண்டும்.

யூடியூப் இப்போது ஏஐ உருவாக்கிய வீடியோ, போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகியவற்றைக் கண்டிப்பாகக் கண்காணிக்கும்.  ஒரு படைப்பாளர் இந்த விதிகளை மீறினால், அவர்களின் வீடியோ பணமதிப்பிழப்பு செய்யப்படலாம். யூடியூப்பில் இருந்து சேனலை அகற்றலாம். அல்லது வருவாய் நின்று போகலாம்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தரமான புகைப்படம், வீடியோ பகிர்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

யாருக்கு பாதிப்பு ஏற்படும்?

  • ஷார்ட்ஸ் வீடியோக்களை மட்டுமே பதிவிடுபவர்கள்.
  • குறைந்த ஈடுபாட்டைக் கொண்டவர்கள்.
  • காப்பிரைட் வீடியோக்களை அப்லோட் செய்பவர்கள்.
  • ஒரே வீடியோவை மீண்டும் மீண்டும் அப்லோடு செய்பவர்கள்.
  • ஏஐ உருவாக்கிய வீடியோக்களை மட்டுமே பதிவிடுபவர்கள்.

பாதிப்புகள் ஏற்படாமல் எப்படி தவிர்ப்பது?

ஒரிஜினலான தரமான உள்ளடக்கத்தை உருவாக்குங்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படியுங்கள். வீடியோவை உருவாக்கும்போது ஏஐ-யை குறைவான அளவில் பயன்படுத்துக்கங்கள். காப்பிரைட்ஸ் இல்லாத இசை, வீடியோக்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தவும். இது தவிர, யூடியூபின் இன் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.