AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

YouTube : சிறுவர்கள் Influencer ஆவதில் சிக்கல்.. விதிகளை கடுமையாக்கிய யூடியூப்!

YouTube's New Rules for Child | யூடியூப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். சிலர் அதில் இன்ஃப்ளூயன்சர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில், சிறுவர்கள் யூடியூப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

YouTube : சிறுவர்கள் Influencer ஆவதில் சிக்கல்.. விதிகளை கடுமையாக்கிய யூடியூப்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jun 2025 20:00 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube) உள்ளிட்ட செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இந்த செயலிகளை பயன்படுத்துவது மட்டுமன்றி, அவற்றில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய தொடங்கிவிட்டனர். பலர் இளம் இன்ஃப்ளூயன்சர்களாக (Influencers) மாற விரும்பி அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே பல இளம் இன்ஃப்ளூயன்சர்ளும் உள்ளனர். இந்த நிலையில், சிறு பிள்ளைகள் இன்ஃப்ளூயன்சர்களாக  மாறுவது குறித்து யூடியூப் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி அவ்வளவு சுலபமாக சிறுவர்கள் இன்ஃப்ளூயன்சர்களாக மாற முடியாது. இந்த நிலையில், சிறுவரகள் யூடியூப் பயன்படுத்துவது குறித்தும், இன்ஃப்ளூயன்சர்களாக மாறுவது குறித்து யூடியூப் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யூடியூபில் புதிய வந்த புதிய நெறிமுறைகள் – என்ன என்ன?

யூடியூப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். யூடிபின் தகவல்கள் பார்ப்பது மட்டுமன்றி, சிலர் தகவல்களை பரிமாறவும் செய்கின்றனர். குறிப்பாக இன்ஃப்ளூயன்சர்கள் சிலர் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடுவது, தகவல்களை வெளியிடுவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமன்றி, சிறியவர்களும் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தான், சிறு பிள்ளைகள் யூடியூப் பயன்படுத்துவது மற்றும் இன்ஃப்ளூயன்சர்களாக மாறுவது தொடர்பான சில விதிகளை யூடியூப் கடுமையாக்கி உள்ளது.

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே லைவ் செய்ய முடியும்

ஜூலை 22, 2025 முதல் யூடியூபில் 16 வயதுக்கு மேல் உள்ளவர்களால் மட்டுமே லைச் செய்ய முடியும். முன்னதாக இது 13 வயதாக இருந்த நிலையில், யூடியூப் அதனை மாற்றியுள்ளது. அவ்வாறு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் லைவ் செய்வதற்கும் சில கட்டுப்படுகள் உள்ளன. அதாவது, அவர்கள் தங்களது பெற்றவர்கள் உடன் இருந்தால் மட்டும் தான் லைவ் செய்ய முடியும். ஒருவேளை சிறுவர்கள் யூடியூப் சேனல் தொடங்க விரும்பினால் அவர்களது பெற்றோர்கள் கூடுதல் சேனல் மேனேஜராக ஆட் செய்யப்பட வேண்டும். சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us