ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்தலாம்.. இன்ஸ்டாகிராமில் வரும் அசத்தல் அம்சம்!
Picture in Picture in Instagram | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மெட்டா பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது.

மெட்டா (Meta) நிறுவனம் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது ஒரு அசத்தல் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதாவது ரீல்ஸ் பார்த்துக்கொண்டே வேறு செயலிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் பிக்சர் இன் பிக்சர் அம்சம் (Picture in Picture) தான் அது. யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்வதற்காக மெட்டா சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்படும் அசத்தல் அம்சங்கள்
உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்திகின்றனர். இதில் பொழுதுபொக்கு முதல் உரையாடல் வரை என பல அசத்தல் அம்சங்கள் உள்ளன. என்னதான பல அசத்தல் அம்சங்கள் இருந்தாலும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த இந்த நிறுவனம் தொடர்ந்து பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிக்சர் இன் பிக்சர் அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : WhatsApp : இன்ஸ்டாகிராமை தொடந்து வாட்ஸ்அப்பிலும் வரும் Close Friends அம்சம்!




பிக்சர் இன் பிக்சர் அம்சம் என்றால் என்ன?
இந்த பிக்சர் இன் பிக்சர் அம்சம் என்பது ஒரு செயலில் ஒரு செயலை செய்துக்கொண்டு இருக்கும்போதே வேறு ஒரு செயலியில் வேறு ஒரு வேலையை செய்ய உதவும் அம்சம் ஆகும். உதாரணமாக யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கும்போது, வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்புவது. யூடியூப் செயலியில் இருந்தால் மட்டுமே அந்த வீடியோவை பார்க்க முடியும். சில சமயங்களில் குரல் மட்டும் கேட்டால் பொதும் என்ற நிலை இருக்கும். ஆனாலும், யூடியூப் செயலியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். இதற்காக தான் யூடியூப் இந்த பிக்சர் இன் பிக்சர் அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Blend போலவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமான Friends அம்சம்.. அட இது சூப்பரா இருக்கே!
இந்த அம்சத்தின் மூலம் ஒரே மொபைல் திரையில் இரண்டு செயலிகளை பயன்படுத்த முடியும். அதாவது ஸ்மார்ட்போன் திரையின் ஒரு பாதியில் யூடியூபையும் மற்றொரு பகுதியில் வேறு ஏதேனும் செயலியை பயன்படுத்தலாம். இது மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ள நிலையில், இதனை விரைவில் இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மெட்டா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.