WhatsApp : இன்ஸ்டாகிராமை தொடந்து வாட்ஸ்அப்பிலும் வரும் Close Friends அம்சம்!
WhatsApp Status Update | வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு புதிய அம்சம் குறித்து வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியை போலவே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் க்ளோஸ் பிரண்ட்ஸை இணைப்பது தான்.

மெட்டாவை (Meta) தனது தாய் நிறுப்வனமாக கொண்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) தொடர்ச்சியாக பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் முக்கிய மாற்றத்தை கொண்டுவருவதற்கான பணிகளை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் (Instagram Story) உள்ளதை போலவே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் (WhatsApp Status) க்ளோஸ் பிரண்ட்ஸ் (Close Friends) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அடுத்தடுத்து அதிரடி அப்டேட்டுகளை வெளியிடும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்கள் எளிமையாக சேவையை பயன்படுத்தும் வகையில் பல புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரே நிறுவனமான மெட்டாவின் கீழ் இயங்குகின்றன. இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள சில அம்சங்கள் வாட்ஸ்அப்பிலும், வாட்ஸ்அப்பில் பிரபலமாக உள்ள சில அம்சங்கள் இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது க்ளோஸ் பிரண்டிஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் ஏஐ உதவியுடன் பிழையின்றி குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!




இன்ஸ்டாவில் இருப்பதை போலவே வாட்ஸ்அப்பிலும் வரும் க்ளோஸ் பிரண்ட்ஸ்
இன்ஸ்டாவில் பல அட்டகாசமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அத்தகைய அம்சங்களில் ஒன்றுதான் ஸ்டோரி. இந்த ஸ்டோரி அம்சத்தை பயன்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம். அதில் உள்ள அட்டகாசமான அம்சம் தான் க்ளோஸ் பிரண்டிஸ். அதாவது, இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு 300 பின்தொடர்பவர்கள் இருந்தால் அதில் ஒருசிலருடன் அதிக பழக்கம் இருக்காது. எனவே சிலர் தங்களது தனிப்பட்ட வட்டத்தில் ஒருசிலர் மட்டுமே இருக்க விரும்புவர். அத்தகையவர்களுக்கான அட்டகாசமான அம்சம் தான் இந்த க்ளோஸ் பிரண்டிஸ். இந்த அச்மத்தை பயன்படுத்தி யார் உங்களுடைய ஸ்டோரியை பார்க்கலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். இந்த பட்டியலில் யார் யார் இருக்கிறார்களே அவர்கள் மட்டும் பார்ப்பார்கள். இது சில சமயங்களில் பாதுகாப்பையும் தனிபட்ட வாழ்க்கையை வாழவும் உதவும்.
இதையும் படிங்க : Google Translate : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!
இந்த க்ளோஸ் பிரண்ட்ஸ் அம்சம் இதுவரை இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.