Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : வாட்ஸ்அப்பில் ஏஐ உதவியுடன் பிழையின்றி குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!

WhatsApp New Feature | மெட்டா நிறுவனம் தனது பயனர்களின் நலனுக்காக வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் ஏஐ அம்சத்துடன் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

WhatsApp : வாட்ஸ்அப்பில் ஏஐ உதவியுடன் பிழையின்றி குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2025 20:30 PM

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் அவ்வப்போது பல அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும்  நிலையில், தற்போது மேலும் ஒரு சிறந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் வலிமை படுத்தும் வகையில், அந்த நிறுவனம் பல அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், குறுஞ்செய்தி (Message) அம்சத்தை மேலும் வலிமை படுத்தும் விதமாக புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம், அதில் உள்ள சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), பயனர்களுக்கு பலனளிக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் பல்வேறு அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது  ஏற்கனவே இருக்கும் அம்சங்களை பயனர்கள் மிக எளிதாக பயன்படுத்தும் வகையில், பல சிறப்பு அம்சங்களை அதில் இணைத்து வருகிறது. அவ்வாறு ஸ்டேட்டஸ், குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோ கால், ஆடியோ கால் என பலவற்றில் அவ்வப்போது மாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில், தான் குறுஞ்செய்தி அனுப்பும் அம்சத்தில் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் வந்த கால் ஷெட்யூலிங் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?

குறுஞ்செய்தி அம்சத்தில் வரும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது குறுஞ்செய்தி அம்சத்தில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் குறுஞ்செய்திகளை சிறந்த வகையில் அனுப்ப ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு மொழி குறித்த தெளிவு இல்லாதபோது அந்த மொழியில் பதில் அளிக்க சில சற்று சிரமப்படுவர். அத்தகைய நேரங்களில் அவர்கள் வேறு ஏதேனும் செயலிகளைம் பயன்படுத்துவர். இவ்வாறு செய்யும்போது நேரம் எடுக்கும். எனவே தான் பயனர்கள் வேறு எந்த செயலிக்கும் சென்று உதவி தேடாமல் வாட்ஸ்அப்பிலே உதவியை பெறும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : கூகுள் மீட், ஜூம் போல வீடியோ கால் செய்ய புதிய வசதி – வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அப்டேட்

என்ன என்ன சிறப்பு அம்சங்கள்

குறுஞ்செய்திகளை அனுப்பும்போது இலக்கன பிழைகள் மற்றும் வாக்கிய பிழைகளை தவிர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவி அம்சத்துடன் கூடிய புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பிழை இல்லாமல் மிக சரியாம முறையில் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.