Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப்பில் யாருக்கும் தெரியாத 17 டிரிக்ஸ் – இது தெரிஞ்சா நீங்க தான் மாஸ்டர்

WhatsApp : வாட்ஸ்அப் வெறும் மெசேஜிங் செயலி மட்டுமல்ல. அதில் வீடியோ கால் முதல் யூடியூப் மூலம் பணம் அனுப்பும் வசதி வரை பல சேவைகளை பெற முடியும். இந்த கட்டுரையில் வாட்ஸ்அப்பில் யாருக்கும் தெரியாத 17 டிரிக்ஸ் குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் யாருக்கும் தெரியாத 17 டிரிக்ஸ் – இது தெரிஞ்சா நீங்க தான் மாஸ்டர்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Sep 2025 18:23 PM

உலக அளவில் இதுவரை 200 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் (WhatsApp) வெறும் மெசேஜிங் செயலி மட்டுமல்ல. அது நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் மூலம் டாக்குமென்ட்ஸ் அனுப்ப முடியும், ஆடியோ, வீடியோ கால் பேச முடியும், மீட்டிங்கில் பங்கேற்க முடியும், யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதி என பல சேவைகளை நமக்கு வழங்குகிறது. நம் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க, அலுவலக பணிகளை ஒருங்கிணைக்க என வாட்ஸ் அப் நமக்கு பெரிதும் கைகொடுக்கிறது. வாட்ஸ்அப்பை பலரும் தொடர்ந்து பயன்படுத்தினாலும் அதில் உள்ள சில டிரிக்ஸ் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்த கட்டுரையில் இது குறித்து பார்க்கலாம்.

இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாக்கும் வசதி, செயற்கை நுண்ணறிவின் உதவி என பல அம்சங்களை எளிதாக்கும் வசதி இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாடஸ்அப்பில் தெரிந்துகொள்ள வேண்டிய 17 டிரிக்ஸ் குறித்து இதில் பார்க்கலாம்.

இதையும் படிக்க : உஷார்! வாட்ஸ் அப்பில் வந்த கல்யாண பத்திரிகையால் ரூ.2 லட்சம் அபேஸ்.. இப்படியும் மோசடி!

1. குறிப்பிட்ட உரையாடல்களை லாக் செய்யும் வசதி

உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை பாஸ்வேர்டு, கைரேகை, முக அடையாளம் மூலம் லாக் செய்து பாதுகாக்கலாம்.

2. டூயல் வாட்ஸ்அப்

ஒரே மொபைலில் வேலை மற்றும் தனிப்பட்ட பயன்பாடு என இரண்டு விதமான வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும்.

3. மெட்டா ஏஐ

உங்களுக்கு இருக்கும் சந்தேகம், கேள்வி போன்றவற்றை விளக்கம் பெற, மெட்டா ஏஐ வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனுக்குடன் துல்லியமான தகவல்களைப் பெறலாம்.

4. சென்சிட்டிவ் உரையாடல்களுக்கு தனி லாக்

ரகசிய தகவல்களை பகிரும் போது அதனை பாதுகாக்க தனிாக லாக் செய்யும் வசதி

5. அழித்த மெசேஜ்களை மீட்கலாம்.

Undo Delete for Me என்ற வசதி மூலம் தவறுதலாக நீக்கி மெசேஜ்களை உடனே மீண்டும் பெறலாம்.

6.  ஸ்டிக்கர்கள்

உங்கள் புகைப்படங்களை ஸ்டிக்கராக மாற்றலாம். மேலும் ஏஐ மூலம் யூனிக் ஸ்டிக்கர்களை உருவாக்கலாம்.

7.  உடனடி தகவல்களை பெறலாம்.

அலுவலகம் சார்ந்த முக்கிய உரையாடல்களின் போது, தகவல் தேவை எனில் உடனடியாக மெட்டா ஏஐ மூலம் பெறலாம்.

8. புதிய நம்பர்களை சேமிக்காமல் மெசேஜ்  அனுப்பும் வசதி

புதிய எண்களை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

9. மெசேஜ்களை திருத்திக்கொள்ளலாம்

தவறுதலாக அனுப்பிய மெசேஜ்களை டெலிட் பண்ணாமல் திருத்திக்கொள்ளலாம்.

இதையும் படிக்க : 32 அரசு சேவைகள்.. இனி ஈஸியா வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. எப்படி தெரியுமா? சென்னை மாநகராட்சி ஏற்பாடு

10. Delete For Me திரும்ப பெறுதல்

தவறுதலாக டெலிட் செய்த மெசேஜ்களை எளிதில் திரும்ப பெற முடியும்.

11. உரையாடல்களை பாதுகாக்கலாம்

உங்கள் அனைத்து உரையாடல்களையும் பாதுகாக்கலாம்.

12. அனிமேட்டட் எமோஜி

வழக்கமான எமோஜிக்களுக்கு பதிலாக, அனிமேட்டட் எமோஜிக்களை அனுப்பலாம்.

13.  ஷார்ட்கட்ஸ்

டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது வேலைகளை எளிதாக செய்ய ஷார்ட்கட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

14. புகைப்படம், வீடியோக்களை HDயில் அனுப்பலாம்

தரத்தை இழக்காமல் போட்டோ, வீடியோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்ப முடியும்.

15. முக்கியமான மெசேஜ்களை பின் செய்யலாம்

முக்கியமான தகவல்கள் கொண்ட மேசேஜ்களை மறக்காமல் இருக்க அவற்றை பின் செய்துகொள்ளலாம்.

16. அவதாரை வடிவமைக்கலாம்

உங்கள் தோற்றத்துக்கு ஏற்ப ஹேர்ஸ்டைல், உடை, கண்ணாடி என  நீங்களாகவே டிஜிட்டல் அவதாரை வடிவமைக்கலாம்.

17. சாட் லிஸ்ட்கள் உருவாக்கலாம்

உரையாடல்களை வேலை நண்பர்கள், குடும்பம் என பிரித்து ஒழுங்குபடுத்தலாம்.