Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

32 அரசு சேவைகள்.. இனி ஈஸியா வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. எப்படி தெரியுமா? சென்னை மாநகராட்சி ஏற்பாடு

Chennai Corporation Whatsapp Services: சென்னை மாநகராட்சி மக்களுக்கான சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாக வழங்கும் அம்சத்தை தொடங்கி வைத்துள்ளது. இதன் மூலம், இனி மக்கள் அரசு திட்டங்களை பெறவும், சான்றிதழ்களை வாங்கவும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. சென்னை மாநகராட்சியின் எண்ணுக்கு வணக்கம் என்று அனுப்பு உங்கள் சேவைகளை வீட்டில் இருந்தப்படியே பெற்றுக் கொள்ளலாம்.

32 அரசு சேவைகள்.. இனி ஈஸியா வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. எப்படி தெரியுமா? சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை மாநகராட்சி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Aug 2025 07:58 AM

சென்னை, ஆகஸ்ட் 26 : மிழகத்திலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சி (Chennai Corporation) சேவையை வாட்ஸ் அப் மூலம் பெறும் வசதியை மேயர் பிரியா தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 35 விதமான சேவையை மக்கள் தங்கள் செல்போன் மூலமே பெற முடியும். இதனால், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க முடியும். மாநகராட்சியின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வகையில், இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.  அரசு சேவைகள் மக்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மக்கள் அலுவலகம் சென்று வரிசையில் காத்திருந்து சிரமப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் கூட, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் மக்கள் அலுவலகம் செல்லாமல், ஒரே முகாமில் தங்களது பல்வேறு சேவைகளை பெற முடியும். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்றை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு சேவையை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.  அதாவது, மிழகத்திலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சி சேவையை வாட்ஸ் அப் மூலம் பெறும் வசதியை மேயர் பிரியா தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் 32 சேவைகளை வாட்ஸ் அப் வழியாகவே எளிதாக பெற முடியும்.

Also Read : அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!

சென்னை மாநகராட்சி சேவையை வாட்ஸ் அப் மூலமே பெறலாம்

மேலும்,  அரசு சான்றிதழ்களை பெறவும், கட்டணம் செலுத்தவும் அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. வீட்டில் இருந்தப்படியே வாட்ஸ் அப் வழியாக செய்து கொள்ள முடியும்.  அதாவது, 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண்ணை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

Also Read : ஆம்புலன்ஸ் வாகனம், ஊழியரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!

32 சேவைகள் என்னென்ன?

இந்த வாட்ஸ் அப் எண்ணிற்குவணக்கம்’ அல்லது ‘HI’ என பதிவிட்டால், மாநகாட்சியின் சேவைகளை அதில் உள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இருக்கும்.

இதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், சொத்து வரி செலுத்துதல், குறை தீர்ப்பு முகாம், சமுதாயக் கூடம் முன்பதிவு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்ப்பிராணிகளின் உரிமம் பெறுவது, கடை வாடகை கட்டணம் மற்றும் கட்டுமானக் கழிவுப் பதிவு உள்ளிட்ட மொத்தம் 32 சேவைகளைப் பெற முடியும்.

வார்டு மற்றும் மண்டல அலுவலகங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள், அம்மா உணவகங்கள், கழிப்பறைகள், தகன மைதானங்கள், சுகாதார மையங்கள் என அனைத்தையும் 24 மணி நேரமும் தெரிந்து கொள்ளலாம். அதோடு, கியூஆர் கோடு மூலம் சொத்து வரி செலுத்தும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.