பொது இடங்களில் நாய்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு.. சென்னை மாநகராட்சி வார்னிங்!
Chennai Corporation Warns Pet Owners : சமீபத்தில் சென்னையில் பிட்புல் ரக வளர்ப்பு நாய் கடித்துது ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களை அச்சமூட்டும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 21 : பொது இடங்களில் நாய்களை கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சமீபத்தில், சென்னையில் பிட்புல் ரக வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி நாய் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. தெரு நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கடிதுது வருகிறது. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டு பலரும் ரேபிஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க, வளர்ப்பு நாய்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. வளர்ப்பு நாய்களை வெளியே கொண்டு வரும்போது, பலரையும் தாக்கி வருகிறது. சமீபத்தில் கூட, சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் பலி
சென்னை ஜாபார்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (48). 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதி வீட்டிற்கு வேலை அமர்ந்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடி என்பவர் தனது பிட்புல் நாயை அழைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். அந்த நேரத்தில், பிட்புல் நாய் வெளியே அமர்ந்திருந்த கருணாகரனை தாக்கியது. அவரது கை, கால்கள், முகம், ஆணுறுப்பை கடித்து குதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, நாய் உரிமையாளர் பூங்கொடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read : நாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம்.. பலியான விசைத்தறி தொழிலாளி!
மேலும், விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான், நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், நாய் உரிமையாளர்கள் தங்களது வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஒரு நாயை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
பொது இடங்களில் நாய்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு
வெறித்தனமாக செல்லப்பிராணிகளை தெருக்கள், பூங்காக்கள், மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இல்லாமல் அழைத்து சென்றால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடக்ஙளில் மற்றவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் நாய்களில் நடவடிக்கை இல்லாதமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பு. பொது மக்கள் அச்ச்மூட்டும் வகையில், ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக் கூடாது.
Also Read : ரீல்ஸ் மோகம்.. பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் பலி.. சென்னையில் ஷாக்!
செல்லப்பிராணி உரிமையாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆக்ரோஷமான நாய்களை உரிமம் இல்லாமல் வைத்திருப்பது, தடுப்பூசி போடத் தவறுவது அல்லது மூகமுடி அணியாமல் இருப்பது போன்ற எந்தவொரு மீறலும் குற்றவியல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இதனை மீறும் உரிமையார்கள் மீது இந்திய விலங்கு நல வாரியத்தின் (AWBI) வழிகாட்டுதல்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் சுற்றுப்புறங்களில் உரிமம் பெறாத மற்றும் ஆக்ரோஷமான நாய்களைப் பற்றி புகாரளிக்குமாறு மாநகராட்சி குடியிருப்பாளர்களை வேண்டுகோள் விடுத்துள்ளது.