சென்னையில் அதிர்ச்சி.. பிட்புல் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு. மக்களே ஜாக்கிரதை!
Chennai Pitpull Dog Bite : சென்னையில் தடை செய்யப்பட்ட பிட்புல் ரக வளர்ப்பு நாய் கடித்து 48 வயதான ஒருவர் உயிரிழந்தார். வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, நாய் கடித்து உயிரிழந்தார். இதனை தடுக்க முயற்சித்த உரிமையாளரை பிட்புல் நாய் கடித்து குதறியது.

சென்னை, ஆகஸ்ட் 19 : சென்னையில் வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாய் கடித்ததில் 47 வயதான கருணாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார். தொடை, கால், கைகளில் நாய் கடித்ததில் கருணாகரன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சென்னையில் தெரு நாய்கள் பிரச்னை பெரிதாக இருக்கும் நிலையில், தற்போது தடை செய்யப்பட்ட வளர்ப்பு நாய் கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் மனிதர்களை நாய்கள் கடிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை நாய்கள் கடித்து வருகிறது. இதனால், பலரும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்து வருகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தெரு நாய்களுக்கு கருத்தடை, கருணைக்கொலை, ரேபிஸ் தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பனும், நாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது நாடு முழுக்க போராட்டங்களை வெடித்து உள்ளது. நாடு முழுவதும் நாய்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்து வருகிறது. இப்படியான சூழலில், தலைநகர் சென்னையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, தெரு நாய்கள் பிரச்னை இருக்கும் நிலையில், சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Also Read : புது மெட்ரோ ரூட்.. சென்னை மக்களுக்கு அடுத்த சப்ரைஸ்.. தொடங்கும் பணிகள்!




வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் பலி
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான கருணாகரன். இவர் சமையல் வேலை செய்து வந்தார். கருணாகரனின் வீட்டிற்கு அருகில் பூங்கொடி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிட்புல் ரக நாயை வளர்த்து வருகிறார். இருவரின் வீடுகளும் அருகருகே இருக்கும். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று காலை பூங்கொடி தனது பிட்புல் நாயை நடைபயிற்சிக்காக அழைத்து சென்றார்.
அப்போது, வீட்டிற்கு வெளியே கருணாகரன் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில், பிட்புல் நாயை கருணாகரன் வீட்டிற்கு அருகே சென்றபோது, வெளியே அமர்ந்திருந்த அவரை கடித்து குதறியது. நாயின் உரிமையாளர் பூங்கொடி நாயை பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது, பூங்கொடியையும் நாய் கடித்திருக்கிறது. தொடர்ந்து, நாய் விடாமல் கருணாகரனின் ஆணுறுப்பு, தொடை, கை, கால், இடுப்பு பகுதிகளில் கடித்து குதறியது.
Also Read : ரீல்ஸ் மோகம்.. பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் பலி.. சென்னையில் ஷாக்!
இதில், ரத்த காயங்களுடன் கருணாகரன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கருணாகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், பூங்கொடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.