Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

7 வயது சிறுமியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. சிறுமிக்கு தீவிர சிகிச்சை!

Girl Terribly Attacked by Pitbull Dog | சென்னையில் 7 வயது சிறுமியை பிட்புல் நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாய் கடித்ததால் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7 வயது சிறுமியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. சிறுமிக்கு தீவிர சிகிச்சை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2025 14:39 PM

சென்னை, ஆகஸ்ட் 05 : சென்னையில் (Chennai) பிட்புல் நாய் கடித்து படுகாயம் அடைந்த 7 வயது சிறுமி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி வீட்டின் கீழே விளையாடிக்கொண்டு இருந்தபோது ஹவுஸ் ஓனரின் செல்லப்பிராணியான அந்த பிட்புல் நாய், சிறுமியை கடித்து குதறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், ஹவுஸ் ஓனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 7 வயது சிறுமியை பிட்புல் கடித்து குதறிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

7 வயது சிறுமியை கடித்து குதறிய பிட்புல் நாய்

சென்னை, தொண்டையார்பேட்டை பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மேல் வீட்டில் வசிக்கும் சிறுமி வீட்டின் கீழே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஹவுஸ் ஓனர் வீட்டில் வளர்க்கப்படும் பிட்புல் நாய் சிறுமியை கடித்து குதறியுள்ளது. இதனால் சிறுமி அலறி துடித்த நிலையில், சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிட்புல் சிறுமியின் முகத்தில் பலமாக கடித்து வைத்திருந்த நிலையில், படுகாயமடைந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இதையும் படிங்க : கணவனின் சந்தேகத்தால் மனமுடைந்த பெண்.. திருமணமான இரண்டே மாதங்களில் விபரீத முடிவு!

ஹவுஸ் ஓனரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

பிட்புல் ரக நாய்கள் மிகவும் மோசமானவை என்பதால் பெரும்பாலான பகுதிகளில் அவற்றை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிட்புல் நாயை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு லைசன்ஸ் வாங்க வேண்டும் என்பதும், அதற்கு முறையாக தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், சிறுமியை கடித்த அந்த பிட்புல் நாய்க்கான முறையான லைசன்ஸை அதன் உரிமையாளர் பெறவில்லை. அதுதவிர நாய்க்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியையும் அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க : விசாரணைக்கு சென்ற பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த போலீஸ்.. பகீர் சம்பவம்!

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயை மீட்டு மாநகராட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளரான 45 வயது ஜோதி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.