Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விசாரணைக்கு சென்ற பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த போலீஸ்.. பகீர் சம்பவம்!

Sub Inspector Misbehaviour | திருச்சில் விசாரணைக்கு அழைத்ததாக காவல் நிலையத்திற்கு சென்ற தன்னிடம் காவல் துணை ஆய்வாளர் பாலியல் இச்சைக்கு தன்னை இணங்குமாறு கேட்டதாக பெண் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விசாரணைக்கு சென்ற பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த போலீஸ்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Aug 2025 10:44 AM

திருச்சி, ஆகஸ்ட் 04 : திருச்சியில் (Trichy) விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற தன்னிடம் துணை காவல் ஆய்வாளர் ஒருவர், பாலியல் இச்சைக்கு இணங்குமாறு கேட்டதாக பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்துள்ளார். இது குறித்து அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பேசி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில், காவல் துணை ஆய்வாளர் பாலியல் உறவுக்கு அழைத்ததாக பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விசாரணைக்கு சென்ற பெண்ணிடம் தவறாக பேசிய சப்-இஸ்பெக்டர்

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு பெண் ஒருவரை அந்த காவல் நிலையத்தின் துணை காவல் ஆய்வாளர் அழைத்துள்ளார். அவரின் அழைப்பின் பேரின் அந்த பெண்ணும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த துணை காவல் ஆய்வாளர் தன்னை தனது இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், இல்லையென்றால் வழக்கை விசாரிக்காமல் இழுத்தடிப்பேன் என மிரட்டியதாகவும் அந்த பெண் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தண்ணீர் வாளியில் விழுந்த 1 வயது குழந்தை.. மூச்சுத்திணறி பலியான சோகம்!

காவல் நிலையத்தில் நடந்தது என்ன – இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட பெண்

இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் அந்த பெண் கூறியுள்ளதாவது, காவல் நிலையத்திற்கு சென்ற என்னிடம் புகார் தொடர்பாக உதவி காவல் ஆணையர் விசாரித்தார். பின்னர் என்னிடம் “நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து மூன்று குழந்தைகள் பெற்றுள்ளாய். நீ உயர்ந்த சாதி தானே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க. உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் உன் புகாரை விசாரிக்காமல் நான் காலதாமதமாக அலைக்கழிப்பேன் என்று அவர் கூறியதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. 25 சவரன் நகையை பறிகொடுத்த பெண்..

மேலும் காவல் உதவி ஆய்வாளர் அவ்வாறு பேசியதால் தான் அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், வெளி மாநிலத்தில் லாரி ஓட்டும் தனது கணவரிடம் இது குறித்து கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். பெண் வெளியிட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.