திடீரென பிரேக் போட்ட டிரைவர்.. பேருந்தில் இருந்து வெளியே விழுந்த குழந்தை.. மதுரையில் அதிர்ச்சி!
Infant Falls From Moving Bus In Madurai : மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து 10 மாத குழந்தை தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், குழந்தை கீழே விழுந்துள்ளது. குழந்தை லேசான காயங்களுடன் உயர் தப்பியுள்ளது.

மதுரை, ஆகஸ்ட் 01 : மதுரையில் பேருந்தில் இருந்து வெளியே குழந்தை விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், குழந்தை தூக்கி வீசப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து விழுந்துள்ளார். இதில் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனியார் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு தனியார் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். அந்த பேருந்தில் முன்பக்கத்தில் படிக்கட்டுக்கு அருகில் இரண்டு குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு, மதன்குமார் மற்று அவரது மனைவி அமர்ந்திருந்தனர்.
பேருந்து, மீனாட்சிபுரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, ஓட்டிநர் திடீரென பிரேக்கை அழுத்தியுள்ளார். இதனால், பேருந்து சட்டென நின்றது. அப்போது, மதன்குமார் கையில் இருந்த 2 வயது குழந்தையுடன் அவர் கீழே விழுந்துள்ளார். அதோடு, அவரது மனைவியின் கையில் இருந்த 10 மாத குழந்தை கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு, முன்பக்க படிக்கட்டின் வழியாக கீழே விழுந்துள்ளது. சாலையில் விழுந்த குழந்தையை அங்கிருந்த ஒருவர் உடனே தூக்கியுள்ளார். இதனை அடுத்து, பேருந்து நின்றவுடன் பதறி அடித்து, மதன்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தையை பார்த்துள்ளது.




Also Read : சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இணையும் பறக்கும் ரயில் திட்டம்.. முதற்கட்ட ஒப்புதல்..
பேருந்தில் இருந்து வெளியே விழுந்த குழந்தை
ஸ்ரீவில்லிபுத்தூர் சடன் பிரேக் போட்ட டிரைவர் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை பகீர் காட்சி.. காயத்துடன் உயிர் தப்பிய குழந்தை pic.twitter.com/Xe1b0hbt5E
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 1, 2025
அப்போது குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இரண்டு குழந்தைகளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read : பயணிகளே கவனிங்க.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!
மேலும், ஓட்டுநர்கள் கவனமாக பேருந்தை ஓட்ட வேண்டும் என ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். மேலும், மற்றொரு தரப்பினர் குழந்தையை வைத்துக் கொண்டு படிக்கட்டுக்கு அருகில் அமர வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகளை கையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். முன்னதாக, 2025 மே மாதத்தில் சேலம் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், 9 மாத குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.