Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயணிகளே கவனிங்க.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!

Chennai Local Train : சென்னை சென்டிரல் - சூலூர்பேட்டைய இடையே இயக்கப்படும் 19 மின்சார ரயில்கள் 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுகிறது. அவ்வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளே கவனிங்க.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!
மின்சார ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Aug 2025 06:26 AM

சென்னை, ஆகஸ்ட் 02 : சென்னையில் 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து (Chennai Local Train Cancelled) செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  சென்னை சென்டிரல் – சூலூர்பேட்டைய (Central – Sulurpeta Train) இடையே இயக்கப்படும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்ததுள்ளது.  சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். இந்த மின்சார ரயில்களில் தினமும்  லட்சக்கணக்கான பயணிகள்  பயணித்து வருகின்றனர்.  குறைந்த டிக்கெட், விரைவாக செல்வதால் பெரும்பாலும் பயணிகள் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர்.  கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் காலை, மாலை பயணித்து வருகின்றனர். பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை வழங்கம்  தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அவ்வப்போது குறிப்பிடத்தக்க வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்  தற்போது முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதாவது, 2025 ஆகஸ்ட் 2ம் தேதியான இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  சென்னை சென்டிரல் – சூலூர்பேட்டைய இடையே இயக்கப்படும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரல் – கூடுர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி – கவரப்பேட்டை ரயில் நிலையம் இடையே மதியம் 1.15 மணி முதல் மாலை 5. 15 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.  இதனால், அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read : கோவை மக்களே அலர்ட்.. மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து


அதன்படி, காலை 10,15, மதியம் 12.10 மணிக்கு சென்டிரல் – சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 1.15, மதியம் 12.35, மாலை 3.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், காலை 11.35, மாலை 3.05 மணிக்கு இயக்கப்படும் சென்டிரல் – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் மாலை 5, மாலை 3.45, மாலை 3.15, மதியம் 1.00, 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மதியம் 12.40, மதியம் 2.40, 3.45 மணிக்கு சென்னை பீச் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

Also Read : பயணிகளே அலர்ட்.. மெட்ரோ ரயிலில் இதை செய்தால் அபராதம்.. கடும் எச்சரிக்கை!

காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டு கும்மிடிப்பூண்டி இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மாலை 3 மணிக்கு கும்மிடிப்பூண்டி தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக 14 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.