Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அப்படிப்போடு.. டிசம்பரில் விடிவுக்காலம்.. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சென்னையின் அண்ணா சாலையில் ₹485 கோடி மதிப்பில் கட்டப்படும் உயர்நிலை மேம்பாலப் பணிகள் 30% நிறைவடைந்துள்ளன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான 3.2 கி.மீ நீள மேம்பாலம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2024க்குள் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படிப்போடு.. டிசம்பரில் விடிவுக்காலம்.. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
அண்ணாசாலை மேம்பாலம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Jul 2025 16:26 PM

சென்னை, ஜூலை 25: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் சாலை போக்குவரத்து நெருக்கடி என்பது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்படியான நிலையில் தான் சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையின் இதய பகுதியாக அறியப்படும் அண்ணா சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரையிலான உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கிண்டி தொடங்கி திருவல்லிக்கேணி வரை செல்லும் இந்த அண்ணா சாலையில் சைதாப்பேட்டை, தியாகராய நகர், நந்தனம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இணையும் சாலையாக இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் அண்ணா சாலை போக்குவரத்து நெருக்கடிகள் மிகப்பெரிய அளவில் திணறி வருகிறது. இந்த சாலையை பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5  மணி முதல் 7 மணி வரையும் கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

Also Read: பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி குண்டாஸ்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

வேகமாக உருவாகும் மேம்பாலம்

குறிப்பாக கல்வி நிலையங்கள், வேலைகளுக்கு செல்லும் நபர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் அண்ணா சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்காக ரூ.485 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். சுமார் 3.2 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழி உயர்நிலைப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது ஆனால் மெட்ரோ ரயில் கட்டுமான பணியை கருத்தில் கொண்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. இதன் மூலம் அண்ணாசாலையில் எளிதாக கடந்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read:புனித ஸ்தலங்களுக்கு போறீங்களா? தமிழக அரசு ரூ.10000 அறிவிப்பு…

இதனிடையே மேம்பால பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நான்கு வழி உயர் மட்ட மேம்பாலத்தின் பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது என கூறினார். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முற்றிலுமாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார். இதே போல் மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் தூண்களின் உறுதி தன்மையையும் அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.