பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி குண்டாஸ்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
Medical Waste : தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜூலை 8ஆம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 2025 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

சென்னை, ஜூலை 16 : தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை (Medical Waste) சட்டவிரோதமாக கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட நிலையில், 2025 ஜூலை 8ஆம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பார்த்தால், கேரளாவை ஒட்டியுள்ள, நெல்லை, தேனி, கோவை மாவட்டங்களில் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர். மருத்துவ கழிவுகளை தரம்பிரித்து பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டிய அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
மருத்துவ கழிவுகளை கொட்டினால் இனி குண்டாஸ்
1998ன் படி, சாதாரண கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என தரம்பிரித்து எரித்து அழிக்க வேண்டும். ஆனால், இதனை மருத்துவமனை நிர்வாகம் செய்யாமல், லாரிகளில் ஏற்றி பொது இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால், பொது மக்கள் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
Also Read : செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.. என்ன காரணம்?




அந்த வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதாவவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அரசு அறிவிப்பு
இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025 ஜூன் மாதம் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில், சட்ட திருத்தம் 2025 ஜூலை 8ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்கள், நீர் நிலைகளில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Also Read : திருவண்ணாமலையில் நடமாடும் வினோத விலங்கு? இது உண்மையா? தமிழக அரசு விளக்கம்
மேலும், நீதிமன்றத்தால் பிறக்கப்படும் உத்தரவுக்கு சமமாக விசாரணையின்றி குற்றம் செய்தவரை சிறையில் வைக்க முடியும். இதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அந்த நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய இந்த சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.