Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.. என்ன காரணம்?

Chengalpattu Kanyakumari Local Holiday : செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், 2025 ஜூலை 28ஆம் தேதி மேல்மருத்துவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.. என்ன காரணம்?
மாணவர்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 16 Jul 2025 16:49 PM

சென்னை, ஜூலை 16 : செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 2025 ஜூலை 24,28ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை (Local Holiday) அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆடி அமாவாசையை (Aadi Amavasai 2025) முன்னிட்டு, 2025 ஜூலை 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் (kanyakumari Local Holiday), மேல்மருத்துவத்தூர் ஆதிபராசத்தி சித்தர் பீட ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு  (Chengalpattu Local Holiday) மாவட்டத்திற்கு 2025 ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள், விசேஷ தினங்களுக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை இருக்கும். மற்ற மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய குறிப்பிட்ட மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

இந்த நிலையில், கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ஆடி அமாவாசை 2025 ஜூலை 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆடி மாதம் வரும் அமாவாசை திதி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்வார்கள். மேலும், கடலில் புனித நீராடி வழிப்பட்டால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலரும் வருகை தருவார்கள்.

Also Read : திருவண்ணாமலையில் நடமாடும் வினோத விலங்கு? இது உண்மையா? தமிழக அரசு விளக்கம்

முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கானோர் குவிந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். வெளி மாவட்டங்கள், உள்ளூர் மக்கள், வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் முக்கடல் சங்கமம், குழித்துறை, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட இடங்களில் கூடுவார்கள்.

இதனால், ஆடி அமாவாசை நாளில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2025 ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசைக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை வலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருத்துவத்தூர் ஆதிபராசத்தி சித்தர் பீட ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, 2025 ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய நாளில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசரகால தேவையை பூர்த்தி செய்யும் அரசு அலுவலகங்கள் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.