Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருவண்ணாமலையில் நடமாடும் வினோத விலங்கு? இது உண்மையா? தமிழக அரசு விளக்கம்

Tamil Nadu Fact Check : திருவண்ணாமலையில் தண்டரம்பட்டு கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஆட்டு தலையுடன் வினோதமான விலங்கின் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவலுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு மறுத்துள்ளது. இது வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது.

திருவண்ணாமலையில் நடமாடும் வினோத விலங்கு? இது உண்மையா? தமிழக அரசு விளக்கம்
திருவண்ணாமலை வினோத விலங்கு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 16 Jul 2025 13:56 PM

திருவண்ணாமலை, ஜூலை 16 : திருவண்ணாமலையில் ஒரு கிராமத்தில் மனிதர்களை தாக்கும் வினோத விலங்குன் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. மேலும், இந்த வினோத விலங்கு பெண்ணை தாக்கிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு (Tamil Nadu Fact Check) இதுகுறித்து முக்கிய தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதாவது, இந்த தகவல் முற்றிலும் தவறானது. வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு அருகே ராதாபுரத்தில் வனப்பகுதியில் அதிகமாக உள்ளது. இந்த காட்டுப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். அந்த காடு முற்றிலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

திருவண்ணாமலையில் நடமாடும் வினோத விலங்கு?

அந்த காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவரும்.  இந்த நிலையில், தண்ராம்பாட்டு வனப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே மனிதர்களை தாக்கும் வினோத விலங்கு இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதாவது, தண்டராம்பட்டு கீழ்வசை என்ற கிராமத்தில் வித்தியாசமான விலங்கு நடமாடி வருவதாக பகீர் தகவல்கள் வெளிவந்தது. அந்த விலங்குக்கு ஆட்டின் தலை இருப்பதாக கூறப்பட்டது.

அந்த வினோத விலங்கு, ஒரு பெண்ணை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.  இது தொடர்பான போட்டோ, வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் பீதியடைய வைத்தது. இது விஷயம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதை அடுத்து, தமிழக அரசு இது உண்மை என தீவிரமாக விசாரித்தது.

Also Read : மதுரை: குழந்தைகளை சிரிக்க வைக்க முயன்ற தந்தை… பறிபோன உயிர்

தமிழக அரசு விளக்கம்

இந்த நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு முக்கிய தகவலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு வட்டம் கீழ்வலசை கிராமத்தில் ஒரு வித்தியாசமான ஜீவன் காட்டில் திடீரென்று ஒரு பெண்ணைத் தாக்கிய சம்பவம் என்று குறிப்பிட்டு சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.

இது முற்றிலும் வதந்தியே. நீளமான நகங்கள், நான்கு விரல்களை கொண்ட கால்கள் மற்றும் ஆட்சின் தலையுடன் மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Also Read : கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

இதனை GOAT Man என்றும், ஏலியன் என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டது. இது 2011ஆம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும். அதைத் பகிர்ந்து திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள்