தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எப்போது தொடக்கம்?
School Survey Tamil Nadu: தமிழ்நாட்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணும் கணக்கெடுப்பு 2025 ஆகஸ்ட் 1-ல் தொடங்குகிறது. இந்தப் பணியில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுவர். குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டு, பெற்றோருக்கு உளவியல் ஆலோசனையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு ஜூலை 06: தமிழகத்தில் (Tamilnadu) 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணும் கணக்கெடுப்பு (Survey to identify abandoned children) 2025 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த திட்டம் கல்வியில் இடைநிற்றலை பூஜ்ஜியமாக்கும் நோக்கில் செயல்படுகிறது. மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். கணக்கெடுப்பின் போது குழந்தைகள் கல்வியில் சேராத காரணமும் பதிவு செய்யப்படும். பின்னர் அவர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை (School Education Department) தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடக்கம்
தமிழகத்தில், 6 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணும் கணக்கெடுப்பு நடவடிக்கை வரும் 2025 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகத்தின் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கல்வியிலிருந்து விலகும் குழந்தைகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக்க வேண்டும்
இந்த ஆண்டுக்கான (2025–26) கல்வியாண்டுக்கான கணக்கெடுப்பு, பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் கல்வியியல் போக்கிற்கு கொண்டுவரும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. கல்வியிலிருந்து விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே முக்கிய இலக்காகும்.




இந்த கணக்கெடுப்பில் மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அரசு அல்லது தனியார் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு
கணக்கெடுப்பின் போது, பள்ளி செல்லாத குழந்தைகள் யார் என்பதை மட்டும் அல்லாது, அவர்கள் கல்வியில் ஈடுபடாததற்கான காரணங்களும் பதிவு செய்யப்பட உள்ளன. பின்னர், அந்த குழந்தைகள் அருகிலுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அவர்களின் பெற்றோர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணிக்கான வழிகாட்டுதல்களில் செயலியில் தகவல் பதிவேற்றம், மாணவர்களின் வருகைப் பதிவு ஆய்வு மற்றும் ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் திட்டமிட்ட விதமாக செயல்படுத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை என்பது, மாநிலத்தில் உள்ள பள்ளி கல்வியை ஒழுங்கமைத்து முன்னேற்றும் முக்கிய நிர்வாக அமைப்பாகும். இது தமிழ்நாடு அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தத் துறை மூலம் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுகின்றன.