Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மக்களே அலர்ட்… 17 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?

Chennai EMU Train Cancelled : சென்னையில் 17 மின்சார ரயில்கள் 2025 ஜூலை 26ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுகிறது. இன்று மதியம் 1. 15 மணி முதல் 5.15 மணி வரை கும்மிடிப்பூண்டி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மக்களே அலர்ட்… 17 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?
மின்சார ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Published: 26 Jul 2025 08:26 AM

சென்னை, ஜூலை 26 : சென்னையில் 2025 ஜூலை 26ஆம் தேதியான இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து (Chennai EMU Train Cancelled) செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. பரமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. இந்த மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள்  பயணித்து வருகின்றனர். குறிப்பாக,  கல்லூரிகள் மாணவர்கள், வேலை செல்பவர்கள் என பலரும் பயணித்து வருகின்றனர்.   சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு,  கடற்கரை வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில்  மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த டிக்கெட் விலை, விரைவாக செல்லும் காரணத்தினால், மக்கள்  மின்சார  ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்கான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025  ஜூலை 26ஆம் தேதி 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் கும்மிடிப்பூண்டி – கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, 2025 ஜூலை 26ஆம் தேதியான இன்று மதியம் 1.15 மணி முதல் 5.15 மணி வரை 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read :  மதுரை-கோவை, சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிப்பு..!

17 மின்சார ரயில்கள் ரத்து


அதன்படி, மதியம் 12.40, மாலை 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி ரயில்களும், மாலை 4.30 இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி சென்னை கடற்கரை ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், காலை 11.35, மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் மதியம் 1.00, 4.30, 3.15, 3.45, 5.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் 1.00, 1.15, 5.00 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் செங்கல்பட்டு கும்மிடிப்பூண்டி ரயில் மிஞ்சூர் கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி தாம்பரம் இடையே மாலை 3.00 மணிக்கு இயக்கப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி மிஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக 14 சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்யே இயக்குகிறது.

Also Read : சென்னை மெட்ரோவில் வரும் புதிய மாற்றம்: ஆக. 1-ஆம் தேதி முதல் அமல்

மேலும், எழும்பூர் – விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயில், தாம்பரத்தில் 9.45 மணிக்கு புறப்படும். விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில், விழுப்புரத்தில் 1.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.