மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்.. ஆராய்சிக்கு எடுத்துச் சென்ற மீனவர்கள்!
Rare Sun Fish Found in Fisherman Net | ராமநாதபுரத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில், ஒரு மீனவரின் படகில் அரிய வகை சூரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள், ஆராய்ச்சிக்காக மீனவர்களிடம் இருந்து மீனை வாங்கிச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம், ஜூலை 25 : ராமநாதபுரத்தில் (Ramanathapuram) கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சுமார் 8 கிலோ எடை கொண்ட அரிய வகை சூரிய மீன் (Sun Fish) சிக்கியுள்ளது. இந்த மீன் ஆழ்கடலில் இருக்கும் மிகவும் அரிய வகை மீனாக கருதப்படும் நிலையில், மீனவர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து சென்ற மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், மீனவர்களிடம் இருந்த அந்த மீனை ஆராய்ச்சிக்காக வாங்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீனவர்களின் வலையில் சிக்கிய சூரிய மீன் – அதிசயம் சம்பவம்
பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவ்வாறு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள, டன் கணக்கில் மீன்களைப் பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்பி உள்ளனர். இதில் ஒரு மீனவரின் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று சிக்கி உள்ளது. எட்டு கிலோ எடை கொண்ட அந்த மீனுக்கு வால் இல்லாமல் வெறும் துடுப்பு மட்டுமே இருந்துள்ளது. இது மிகவும் அரிதான மீன் என்பதால் மீனவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.. விபரீத முடிவு எடுத்த மருமகள்.. சோக சம்பவம்!




தகவல் அறிந்து ராமநாதபுரத்திற்கு வந்த கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள்
இது குறித்து கூறிய மீனவர்கள், ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இந்த மீனை காணலாம். இது வலையில் சிக்காத மிகவும் அரிதான மீன். அதிவேகமாக நீந்தும் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் இந்த மீனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். காற்று அதிகம் வீசும் வேளையில் தான் இந்த மீன் வலையில் கிடைக்கும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர். மீனவர்களின் வலையில் இந்த ஆரிய வகை சூரிய மீன் சிக்கிய தகவல் அறிந்த மத்திய கடல் மீன ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ராமநாதபுரத்திற்கு வந்து மீனவர்களிடம் இருந்து சூரிய மீனை ஆராய்ச்சிக்காக வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க : சிவகங்கை: தம்பதி ஒரே சேலையில் விபரீத முடிவு.. அனாதையான 3 குழந்தைகள்..!
மீனை விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்த ராமநாதபுரம் மீனவர்கள்
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கேட்டதன் அடிப்படையில் அவர்களிடம் அந்த மீனை ஒப்படைத்து விட்டோம் என்று அவர்கள் கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.