கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. மக்கள் அதிர்ச்சி.. ஒரு கிலோ இவ்வளவா?
Tomato Price Hike : சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. 2025 ஜூன் மாதத்தில் ரூ.20 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசு பண்ணை பசுமைக் கடைகள் மூலம் தக்காளி மானிய விலையில் விற்பனை செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை, ஜூலை 25 : வரத்து குறைவு காரணமாக, சென்னை கோயம்பேட்டில் தக்காளி (Tomato Price Hike) கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூன் மாதத்தில் கிலோ ரூ.10 முதல் 20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலே தக்காளி 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், காய்கறிகள் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள் விலையும் அதிகமாகி உள்ளது. அதாவது, சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கர்நாடகா, ஆந்திரா, கேராள உளிளட்ட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு சில்லரை விற்பனையில் விற்கிறார்கள். இந்த நிலையில், சமையலில் தவிர்க்க முடியாத தக்காளி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் அதிகளவு தக்காள் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
Also Read : 6 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னையில் நிலவரம் என்ன? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!




கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை
இந்த மாநிலங்களில் இருந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி விலைச்சல் குறைந்துள்ளது. இதனால், சென்னையில் வரத்து குறைந்ததால், தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தக்காளி வரத்து கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “வழக்கமாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து 700 டன் தக்காளி வரத்து இருக்கும். இது தற்போது 500 டன்னாகக் குறைந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதமடைந்ததாலும், சாகுபடிச் செலவு அதிகரித்ததாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு இதே நிலைதான் இருக்கும்” என தெரிவித்தனர்.
Also Read : இனி ரயில் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை.. ரூ. 1000 அபராதம் என எச்சரிக்கை..
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தற்போது ரூ.40 முதல் 45 வரை விற்பனை செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் பல சந்தைகளில் ஒரு கிலோவுக்கு ரூ.50-60க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில், ஆண்டு முழுவதும் சுமார் 12,000 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கும் உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வால், அரசு பண்ணை பசுமைக் கடைகள் மூலம் தக்காளியை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.