Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேற லெவலில் மாறிய தூத்துக்குடி ஏர்போர்ட்.. இனி இரவு நேர விமான சேவை.. இவ்வளவு வசதிகளா?

Thoothukudi Airport : தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி 2025 ஜூலை 26ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். ரூ.381 கோடி மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரவு நேர சேவையும் வர உள்ளது. நவீன முறையில் தூத்துக்குடி விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. 1,440 பேரை கையாளும் வகையில் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வேற லெவலில் மாறிய தூத்துக்குடி ஏர்போர்ட்..  இனி இரவு நேர விமான சேவை.. இவ்வளவு வசதிகளா?
தூத்துக்குடி விமான நிலையம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Jul 2025 17:27 PM

தூத்துக்குடி, ஜூலை 23 : ரூ.381 கோடி மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையம் (Thoothukudi Airport) புதுப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை பிரதமர் மோடி 2025 ஜூலை 26ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதன் மூலம், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர சேவையும் தொடங்கப்படுகிறது. இதுவரை பகல் நேரங்களில் மட்டுமே விமான சேவை இருந்து வந்த நிலையில், தற்போது இரவு நேரத்திலும் சேவை தொடங்க உள்ளது. தென் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக இருப்பது தூத்துக்குடி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமானம் நிலையம் 1992ஆம் ஆண்டு 1,350 மீட்டர் நீளத்தில் விமான நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த விமான சேவை திறக்கப்பட்டு, 14 மாதங்களே செயல்பாட்டில் இருந்தது. பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு, 2006ஆம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. தற்போது சென்னை, பெங்களூருவுக்கு 9 விமான சேவைகள் இருந்து வருகிறது. தற்போது, தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தில் விரிவுப்படுத்தப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ரூ.381 கோடியில் விரிவுப்படுத்தப்பட்டு, 2025 ஜூலை 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Also Read : தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத் திட்டம் இதுதான்.. முழு விவரம்!

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்


தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,350 மீட்டராக இருந்த நிலையில், அதனை 3,115 மீட்டர் நீளமாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை விமானங்களுக்காக கூடுதலாக 110 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. A320 போன்ற பெரிய விமானங்களைக் கையாள 30 மீட்டரில் இருந்து 45 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : புனித ஸ்தலங்களுக்கு போறீங்களா? தமிழக அரசு ரூ.10000 அறிவிப்பு…

அதோடு, 644 இருக்கைகள், தீயணைப்பு நிலையம், 7 baggage scanner உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களுக்கு விரைவில் சேவை இயக்கப்பட உள்ளது. இரவு நேர விமான சேவையும் வர உள்ளது. 400க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.