Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் போறீங்களா? போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு!

TNSTC Special Buses : ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் 2025 ஜூலை 23ஆம் தேதியான நாளை முதல் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருவிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் போறீங்களா? போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு!
சிறப்பு பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jul 2025 18:05 PM

சென்னை, ஜூலை 22 : ஆடி அமாவாசையை  (Aadi Amavasai 2025) முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு (Rameswaram) சிறப்புகள் (TNSTC Special Buses) 2025 ஜூலை 23ஆம் தேதியான நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 2025 ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாள் அன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இதில், ஆடி மாதம் வரும் அமாவாசை சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, மற்ற மாதத்தை விட, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது வழக்கம். அன்றைய தினம் புண்ணிய நதிகளில் பக்தர்கள் தர்ப்பணம் தருவார்கள்.

இதில் குறிப்பாக, ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதனையொட்டி, ராமேஸ்வரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆடி அமாவாசையொட்டி, பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தருவதால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

Also Read : சென்னை மெட்ரோவில் வரும் புதிய மாற்றம்: ஆக. 1-ஆம் தேதி முதல் அமல்

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இதனால், பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இதனால்,  பயணிகளின் பயணத்தை சிறப்பாக்க, சென்னையில் இருந்தும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025 ஜூலை 23ஆம் தேதி சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

2025 ஜூலை 24ஆம் தேதி பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் தங்கள் இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Also Read : ஜூலை 28ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு!

TNSTC என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செயலி மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். முக்கிய பேருந்து முனையங்களில் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் பயணிகளுக்கு உதவவும் கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.