Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Chennai Night Patrol: அதிகரிக்கும் இரவு நேரக் குற்றங்கள்.. சென்னை காவல்துறையினருக்கு புதிய உத்தரவுகள்!

Chennai Police Issue Night Duty Orders: சென்னை காவல்துறை, இரவு நேரக் குற்றங்களைத் தடுக்க புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பைக் ரேஸ் தடை, போதிய ஓய்வு, இரவு நேர சோதனை, விடுதிகளில் திடீர் சோதனை, செக்பாயிண்ட் தகவல் பரிமாற்றம் போன்றவை அடங்கும். காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Chennai Night Patrol: அதிகரிக்கும் இரவு நேரக் குற்றங்கள்.. சென்னை காவல்துறையினருக்கு புதிய உத்தரவுகள்!
இரவுநேர காவல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jul 2025 20:33 PM

சென்னை, ஜூலை 21: சென்னையில் (Chennai) இரவு நேரங்களில் நடக்கும் குற்றச்செயல்களை நடப்பதற்காக மாநகர காவல்துறை (Chennai Metropolitan Police) இரவு நேர பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் முக்கிய சாலைகளில் நடக்கும் பைக் ரேஸ் (Bike Race) தடுப்பது, போதிய ஓய்வு, இரவு நேர சோதனை, விடுதிகளில் திடீர் சோதனை, செக்பாயிண்ட்க்கு தகவல் கொடுத்தல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்களாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதில், இரவு நேர காவல் பணியில் இருக்கும் காவலர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை விரிவாக இங்கு பார்ப்போம்.

ALSO READ: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு ?

சென்னையில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

  • சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, சென்னை கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும் இனி பைக் ரேஸ் நடைபெறக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிக்கும் நபர்களை, அடுத்த செக்பாயிண்டில் விரைவான தகவல் கொடுத்து பிடித்து அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
  • இரவு நேரங்களில் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படாத வகையில் இரவு நேர காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும்.
  • இரவு நேர ரோந்து வாகன காவல்துறையினர், இரவில் போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர காவல்துறையினர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை  குற்றங்களை தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.
  • அவசர அழைப்புகளுக்கு காவல்துறையினர் உரிய தீர்வு காண வேண்டும். மேலிடத்தில் இருந்து கேள்வி எழுப்பும் நேரத்தில் எதுவும் நடக்கவில்லை என்று எந்தவிதமான மழுப்பல்களும் கூறக் கூடாது. புகார்தாரர்களிடம் செல்போனில் மட்டும் பேசி பிரச்சனையை முடிக்காமல், சம்பவ இடத்திற்கு கட்டாயம் சென்று பார்வையிட வேண்டும்.
  • அதிகாலை 2 முதல் 4 மணி வரை வங்கிகள், ஏ.டி.எம்.களில் உள்ள பாதுகாவலர்கள் தூங்கிவிடுவார்கள் என்பதால், அவர்களை அலர்ட் செய்ய வேண்டும். இரவுப் பணியில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் காவலன் செயலியில் பதிவேற்றம் செய்வது முக்கியம்.

ALSO READ: திருச்செந்தூர் சரவணப்பொய்கை 50 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்பு: பக்தர்கள் பெருமகிழ்ச்சி!

  • சென்னையில் ஒவ்வொரு ஏரியாக்களிலும் இருக்கும் குறைந்தது 2 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும். 2 பேர் தங்கும் அறையில் கூடுதல் நபர்கள் தங்கியிருந்தால் அவர்களிடம் போதிய விசாரணை நடத்த வேண்டும்.
  • போதிய ஓய்வுக்குப் பிறகுதான் இரவுப் பணி வழங்கப்படுவதால், இரவுப் பணியில் ஓய்வு எடுத்தல் என்பது கூடாது.
  • இரவு நேரத்தில் எந்த காவல் நிலையங்களிலும் குற்றவாளிகளை வைத்திருக்கக் கூடாது.
  • வாகன தணிக்கையைப் பார்த்து யாரும் வேகமாக வாகனங்களை இயக்கி தப்பிச் சென்றால், அவர்களை துரத்தி விரட்டிப் பிடிக்காமல், அடுத்த சோதனை சாவடிகளில் தகவல் அளித்து அவர்களைப் பிடிக்க வேண்டும்.